News January 7, 2026

BREAKING: தங்கம் விலை மளமளவென குறைந்தது

image

காலையில் ஆபரணத் தங்கத்தின் விலை ₹320 உயர்ந்த நிலையில், மாலையில் சரசரவென குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹560 குறைந்து ₹1,02,400-க்கும், கிராமுக்கு ₹70 குறைந்து ₹12,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் ஏற்பட்ட மாற்றங்களின் நம்மூரிலும் விலை குறைந்துள்ளது.

Similar News

News January 8, 2026

₹26.30 கோடிக்கு சொகுசு ஃபிளாட் வாங்கிய ரோஹித் மனைவி

image

ரோஹித் மனைவி ரித்திகா, மும்பையின் பிரபாதேவி பகுதியில் ₹26.30 கோடிக்கு சொகுசு ஃபிளாட் ஒன்றை வாங்கியுள்ளார். ஆடம்பரமான அஹுஜா டவர்ஸில் 2,790 சதுர அடியில், 3 கார் பார்க்கிங் வசதியுடன் அந்த ஃபிளாட் அமைந்துள்ளது. ரோஹித்தும் அதே கட்டடத்தில் ₹30 கோடி மதிப்புள்ள ஃபிளாட் ஒன்றை வைத்துள்ளார். பிரபாதேவி பகுதி பல முக்கிய வணிக பகுதிகளுக்கு அருகில் உள்ளதால், அங்கு வீடு வாங்குவது பலரது விருப்பமாக இருக்கிறது.

News January 8, 2026

9 ஆண்டுகளுக்கு முன்பே ராகுல் சொன்னார்: விஜய் வசந்த்

image

பாஜக அரசு வேண்டுமென்றே ஜனநாயகன் பட தணிக்கைச் சான்றிதழை நிறுத்தி வைத்துள்ளதாக காங்., MP விஜய் வசந்த் விமர்சித்துள்ளார். 2017-ல் விஜய்யின் மெர்சல் பட சர்ச்சையின் போது, சினிமா என்பது தமிழ் மொழி, கலாசாரத்தின் ஆழ்ந்த வெளிப்பாடு. அதனை அவமதிக்காதீர்கள் மோடி என ராகுல் பதிவிட்டிருந்தார். அதை குறிப்பிட்ட அவர், 9 ஆண்டுகளுக்கு முன்பு பாஜக அரசை ராகுல் விமர்சித்தது இன்று உண்மையாகிவிட்டதாக கூறியுள்ளார்.

News January 8, 2026

செல்போனில் இதை செய்தால் ஜெயில் தண்டனை

image

டிஜிட்டல் யுகத்தில், இருந்த இடத்திலேயே செல்போனில் எல்லாவற்றையும் அறியலாம். ஆனால், கூகுளில் சில விஷயங்களை தேடிப் பார்த்தால் ஜெயில் தண்டனை கன்ஃபார்ம். வெடிகுண்டு தயாரிப்பது எப்படி, சாஃப்ட்வேர் உள்ளிட்டவற்றை ஹேக் செய்வது எப்படி என தேடுவது சட்டப்படி குற்றமாகும். மேலும், குழந்தைகளின் ஆபாச படங்கள், காப்பிரைட்டை மீறி திரைப்படங்களை டவுன்லோடு செய்வது உள்ளிட்டவற்றை செய்தாலும் நீங்கள் கம்பி எண்ணுவது உறுதி.

error: Content is protected !!