News November 15, 2025
BREAKING: தங்கம் விலை மளமளவென குறைந்தது

ஆபரணத் தங்கம் விலை இன்றும் மளமளவென்று குறைந்ததால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹1,520 குறைந்து ₹92,400-க்கும், கிராமுக்கு ₹190 குறைந்து ₹11,550-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வரும் நாள்களிலும் தங்கம் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக நகைக்கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
Similar News
News November 15, 2025
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறப்பு

நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனுக்காக, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை (நவ.16) மாலை 5:00 மணிக்கு திறக்கப்படுகிறது. டிசம்பர் 27-ல் மண்டல பூஜையும், ஜன.14-ல் மகர விளக்கு பூஜையும் நடைபெறவுள்ளது. எனவே, மாலை அணிந்து விரதம் இருப்போர், சுவாமியை தரிசிக்க திட்டமிட்டுக் கொள்ளலாம். 18-ம் படிக்கு மேல் சுவாமி சன்னதி வரை செல்போன், கேமரா ஆகியவை பயன்படுத்த தேவஸ்தானம் தடை விதித்துள்ளது.
News November 15, 2025
பிக்பாஸில் இருந்து விலகுகிறாரா விஜய் சேதுபதி?

பிக்பாஸ் தொகுப்பாளர் ஜர்னிக்கு எண்ட் கார்டு போட விஜய் சேதுபதி நினைப்பதாக பேசப்படுகிறது. இதற்கு காரணம், அவர் கமிட் ஆகியிருக்கும் பல படங்கள் பெண்டிங்கில் இருக்கிறதாம். எனவே பிக்பாஸை விடுத்து, பூரி ஜெகன்னாத்தின் தெலுங்கு படம், மணிகண்டனின் ‘முத்து என்கிற காட்டான்’ வெப் சீரிஸ் ஷூட்டிங்கில் கவனம் செலுத்தவுள்ளதாக கூறப்படுகிறது. VJS-க்கு பதிலாக பிக்பாஸை யார் ஹோஸ்ட் செய்தால் நல்லா இருக்கும்?
News November 15, 2025
தமிழக மேலவை கலைக்கப்பட்ட வரலாறு தெரியுமா?

65 ஆண்டுகள் தமிழக சட்டப்பேரவையில் இருந்த மேலவை கலைக்கப்பட்டதற்கும், மீண்டும் கொண்டுவர முயற்சி எடுக்கப்பட்டு கைவிடப்பட்டதற்கும் திராவிட கட்சிகளின் அரசியல் பின்னணி உள்ளது. அது என்ன மேலவை? இதன் அதிகாரங்கள், பணிகள் என்னென்ன? தமிழகத்தில் ஏன் மேலவை கலைக்கப்பட்டது? கருணாநிதிக்கு ஏற்பட்ட பின்னடைவு என்னவென்பதை மேலே போட்டோக்களாக கொடுத்துள்ளோம். அதை swipe செய்து பாருங்கள். ஷேர் பண்ணுங்க.


