News November 5, 2025
BREAKING: தங்கம் விலை மளமளவென குறைந்தது

ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் குறைந்ததால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில நாளாக உச்சத்தில் இருந்த ஆபரணத் தங்கம், இன்று சவரனுக்கு ₹560 குறைந்து, ₹89,440-ஆகவும், கிராமுக்கு ₹70 குறைந்து ₹11,180-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ₹800, இன்று ₹560 என 2 நாளில் ₹1360 குறைந்துள்ளது.
Similar News
News November 5, 2025
கிரிசில்டா மிரட்டி திருமணம் செய்யவைத்தார்: ரங்கராஜ்

ஜாய் கிரிசில்டா தன்னை மிரட்டியதால் அவரை 2வது திருமணம் செய்ததாக மாதம்பட்டி ரங்கராஜ் கூறியுள்ளார். கிரிசில்டாவை திருமணம் செய்து கொண்டதாக மகளிர் ஆணையத்தில் எந்த ஒப்புதலையும் கொடுக்கவில்லை என்ற அவர், ஆணையத்தின் பரிந்துரை உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் விளக்கமளித்துள்ளார். மேலும், DNA சோதனையில் குழந்தை தன்னுடையது என்று நிரூபித்தால் கவனித்துக்கொள்வேன் என கூறியுள்ளார்.
News November 5, 2025
வாக்கு திருட்டு: ராகுல் காந்தி புதிய குற்றச்சாட்டு

ஹரியானாவில் வாக்கு திருட்டு நடந்திருப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். அனைத்து கருத்துக் கணிப்புகளும் காங்., கட்சிக்கே வெற்றி என கூறியதாக தெரிவித்த அவர், மோசடிகள் நடக்காமல் இருந்திருந்தால் ஹரியானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கும் என கூறியுள்ளார். ஹரியானாவில் நடந்திருக்கும் மோசடிகள் தன்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
News November 5, 2025
BIG BREAKING: கூட்டணி முடிவு… அறிவித்தார் விஜய்

விஜய் தலைமையில் சட்டப்பேரவை தேர்தலை தவெக சந்திக்கும் என்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2026 தேர்தலில் கூட்டணி உள்ளிட்ட அனைத்து முடிவுகளையும் எடுக்க விஜய்க்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், விஜய்தான் முதல்வர் வேட்பாளர் என தவெக திட்டவட்டமாக அறிவித்துள்ளது. கூட்டணிக்கு வர வேண்டும் என ADMK, BJP மாறி மாறி அழைப்பு விடுத்த நிலையில், அதனை தவெக நிராகரித்துள்ளது.


