News March 26, 2026
BREAKING: தங்கம் விலை தாறுமாறாக குறைந்தது

காலையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில், மாலையில் தலைகீழாக குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹320 குறைந்து ₹13,350-க்கும், சவரனுக்கு ₹2,560 குறைந்து ₹1,06,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை மிகப்பெரிய வீழ்ச்சி அடைந்துள்ளதால், வரும் நாள்களிலும் விலை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News April 9, 2026
வீடு, கார் இல்லை.. நாட்டின் ஏழ்மையான CM யார் தெரியுமா?

மேற்குவங்க CM மம்தா பிரமாண பத்திரத்தில் தனக்கு சொந்த வீடோ காரோ இல்லை என்று தெரிவித்துள்ளார். தன்னிடம் 9.75 கிராம் தங்கமும், ₹75,700 ரொக்கமும் இருப்பதாகவும், அசையும் சொத்து மதிப்பு ₹15.38 லட்சம் தான் என்றும் குறிப்பிட்டுள்ளார். இவர் தாக்கல் செய்துள்ள Affidavit-ஐ அடிப்படையாக கொண்டு பார்த்தால், இவரே தற்போதைக்கு இந்தியாவில் குறைவான சொத்துகளை கொண்டுள்ள CM-ஆக அறியப்படுகிறார்.
News April 9, 2026
விடுமுறை.. நாளை முதல் சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

வார இறுதி, தமிழ் புத்தாண்டு விடுமுறையையொட்டி, மக்கள் ஊர்களுக்கு செல்ல, நாளை (ஏப்.10) முதல் 5 நாள்களுக்கு சிறப்பு பஸ்களை அரசு அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை உள்பட முக்கிய நகரங்களில் இருந்து கூடுதலாக 2,119 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதுவரை 10,000-க்கும் அதிகமானோர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். <
News April 9, 2026
தவெக மீது ஒரே நாளில் 12 வழக்குகள்

தூத்துக்குடியில் விஜய் நேற்று பிரசாரம் செய்தபோது பல விதிகளை மீறியதாக அவர் உள்பட நிர்வாகிகள் மீது 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக சென்றது, அனுமதிக்கப்படாத இடங்களில் கட்சி கொடி பயன்படுத்தியது உள்ளிட்ட காரணங்களுக்காக வழக்குகள் பதிவாகியுள்ளன. ஏற்கெனவே பெரம்பூரில் பிரசாரத்தில் விஜய் விதி மீறலில் ஈடுபட்டதாக அவர் மீது வழக்கு பதிவானது குறிப்பிடத்தக்கது.


