News December 23, 2025
BREAKING: தங்கம் விலை தடாலடியாக மாறியது

தங்கம் விலை இன்று ஒரே நாளில் ₹1,600 உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹1,600 உயர்ந்து ₹1,02,160-க்கும், கிராமுக்கு ₹200 உயர்ந்து ₹12,770-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கெனவே தங்கம் விலை ₹1 லட்சத்தை கடந்துவிட்டது. தற்போது மேலும் இதன் விலை வரலாறு காணாத உச்சத்தை அடைந்துள்ளதால் சாமானியர்களுக்கு எட்டாக் கனியாக மாறியுள்ளது.
Similar News
News December 25, 2025
வங்கதேசத்தில் மேலும் ஒரு இந்து இளைஞர் படுகொலை

வங்கதேசத்தின் ராஜ்பாரி மாவட்டத்தில், அம்ரித் மண்டல்(29) என்ற இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். புதன்கிழமை இரவு சுமார் 11 மணியளவில், அவர் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், சாலையில் இழுத்துச் செல்லப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டார். இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சமீபத்தில், இந்து இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டு, எரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News December 25, 2025
விவசாயத்தில் இந்தியா கெத்து தெரியுமா?

இந்திய விவசாயத்தின் பலம் உங்களுக்கு தெரியுமா? உலகில் மிக அதிக அளவில் விவசாயப் பொருள்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. உற்பத்தி முதல் ஏற்றுமதி வரை அனைத்திலும் கெத்து காட்டுகிறது. அதன்படி, நம் நாட்டின் விவசாய பலத்தை எடுத்துக்காட்டும் சில போட்டோக்களை, மேலே உங்களுக்காக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News December 25, 2025
9 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய பெண்

திருமணம் என்பது இவருக்கு வேடிக்கையான விளையாட்டாக இருந்துள்ளது. ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் பகுதியைச் சேர்ந்த வாணி, தனது அத்தையின் உதவியுடன், அப்பாவி இளைஞர்களை திருமணம் செய்து, பின்னர் பணத்துடன் தப்பி ஓடியுள்ளார். இதுவரை 8 பேரை திருமணம் செய்த வாணி, சமீபத்தில், 9-வது திருமணம் செய்தார். வாணியை திருமணம் செய்தவர், சந்தேகத்தின்பேரில் போலீசில் புகாரளிக்க, வாணியும் அவரது அத்தையும் தற்போது தலைமறைவாகி உள்ளனர்.


