News December 11, 2025
BREAKING: தங்கம் விலை தடாலடியாக மாறியுள்ளது

ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹160 உயர்ந்து ₹96,400-க்கும், கிராமுக்கு ₹20 உயர்ந்து ₹12,050-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக, நேற்று ₹240, இன்று ₹160 என 2 நாளில் மொத்தம் சவரனுக்கு ₹400 உயர்ந்துள்ளது.
Similar News
News December 16, 2025
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலின் சார்ஜ் ஷீட் தாக்கல்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான குற்றப்பத்திரிகையை ஜம்மு சிறப்பு கோர்ட்டில் NIA தாக்கல் செய்தது. 1597 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையில், லஷ்கர் – இ – தொய்பா அமைப்பு மற்றும் அதன் நிழல் அமைப்பான எதிப்பு முன்னணி உள்பட 7 பேருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய 3 பயங்கரவாதிகளை ஆபரேஷன் மகாதேவ் மூலம் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
News December 16, 2025
வரலாற்றில் இன்று

*1770–இசைமேதை பீத்தோவன் பிறந்தநாள்.
*1928 – சென்னை மாகாண முதல் CM பனகல் அரசர் நினைவு நாள்.
*1971 – போரில் இந்தியா ராணுவத்திடம் பாகிஸ்தான் வீரர்கள் சரணடைந்தனர்.
*1971 – பிரிட்டனிடம் இருந்து பஹ்ரைன் அரசு விடுதலை பெற்றது.
*1991 – சோவியத் யூனியனில் இருந்து கஜகஸ்தான் விடுதலை பெற்றது.
News December 16, 2025
IPL மினி ஏலத்தின் பட்டியலில் கடைசி நேரத்தில் டுவிஸ்ட்

IPL-ன் மினி ஏலம் அபுதாபியில் இன்று மதியம் 2.30 மணிக்கு நடைபெற உள்ளது. கடைசி நேரத்தில் அபிமன்யூ ஈஸ்வரன் உள்பட 19 வீரர்களின் பெயர்கள் ஏலப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் சேர்த்து ஏலத்தில் உள்ள வீரர்களின் எண்ணிக்கை 369-ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 77 பேரை மட்டும் IPL அணிகளால் எடுக்க முடியும். CSK(43) மற்றும் KKR (64) அதிக தொகையுடன் ஏலத்திற்குள் நுழைகின்றன.


