News February 16, 2026

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹960 குறைந்தது

image

சென்னையில் தங்கம் விலை இன்று(பிப்.16) குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் 1 கிராமுக்கு ₹120 குறைந்து ₹14,440-க்கும், சவரன் ₹960 குறைந்து ₹1,15,520-க்கும் விற்பனையாகிறது. <<19154307>>சர்வதேச சந்தையில் ஏற்பட்ட சரிவின்<<>> காரணமாக இந்திய சந்தையில் இன்று தங்கம் விலை கணிசமாக குறைந்துள்ளது.

Similar News

News February 18, 2026

மீன் குழம்பு சாப்பிட்டதால் மரணம்.. அதிர்ச்சி

image

திருவனந்தபுரத்தில் மீன் குழம்பு சாப்பிட்ட 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் இரவு ஹோட்டலில் மீன் குழம்புடன் உணவு சாப்பிட்ட ஷாஜி, அவரது மாமியார் ரஷீதா பீவி உயிரிழந்துள்ளனர். கவலைக்கிடமான நிலையில் ஷாஜிவின் மனைவி சஜினா சிகிச்சை பெற்று வருகிறார். கெட்டுப்போன மீன் குழம்பை சாப்பிட்டதால், அது விஷமாக மாறி இருவரின் உயிரை பறித்திருக்கலாம் என கூறப்படுகிறது.

News February 18, 2026

‘Hump day’ என்றால் என்ன தெரியுமா?

image

புதன்கிழமையை அமெரிக்காவில் ‘Hump day’ என்று அழைக்கின்றனர். இந்தியாவில் ஐடி துறையினரும் அப்படியே குறிப்பிடுகின்றனர். திங்கள் – வெள்ளி வரை உள்ள நாள்களில், 3 நாள்களை வெற்றிக்கரமாக முடிப்பதால் புதன்கிழமையை Hump day என்று அழைக்கின்றனர். இதையடுத்து விடுமுறைக்கு 2 நாள்கள் மட்டுமே இருக்கும். எனவே, இந்த புதன்கிழமைக்கு உற்சாகமாக இப்படி ஒரு பெயர் வைத்துள்ளனர். நீங்கள் புதன்கிழமையை எப்படி பார்க்கிறீர்கள்?

News February 18, 2026

‘முதல்வன்’ புகழேந்தி மாதிரி தலைவன் வரணும்: அர்ஜுன்

image

‘முதல்வன்’ போன்ற ஒரு அரசியல் கதையை தான் தயாரித்து வைத்திருப்பதாக அர்ஜுன் கூறியுள்ளார். மக்கள் மனதில் புகழேந்தி மாதிரி ஒருதலைவன் வரமாட்டானா என்று இருந்த ஏக்கமும், வலியுமே ‘முதல்வன்’ படம் எனக் குறிப்பிட்ட அவர், அதில் மக்களின் நிஜமான ஆதங்கம் பிரதிபலிக்கப்பட்டதாலேயே, அப்படத்தின் தாக்கம் இன்றும் இருப்பதாக தெரிவித்தார். மேலும், அரசியலில் புகழேந்தி மாதிரியான தலைவன் நிச்சயம் வரவேண்டும் எனவும் கூறினார்.

error: Content is protected !!