News November 26, 2025
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹640 உயர்ந்தது

தங்கம் விலை தொடர்ந்து 2-வது நாளாக உயர்வைக் கண்டுள்ளது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹80 உயர்ந்து ₹11,800-க்கும், சவரன் ₹640 உயர்ந்து ₹94,400-க்கும் விற்பனையாகிறது. <<18390417>>சர்வதேச சந்தையில்<<>> தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதால், இந்திய சந்தையில், நேற்று சவரனுக்கு ₹1,600, இன்று ₹640 என 2 நாள்களில் மட்டும் ₹2,240 அதிகரித்துள்ளது கவனிக்கத்தக்கது. SHARE IT.
Similar News
News November 26, 2025
மிகவும் அழகான ஆண்களை கொண்ட நாடுகள்

பாப்-கலாச்சாரம், பிரபலங்கள், மாடலிங், உலகளவில் செல்வாக்கு ஆகியவற்றின் அடிப்படையில், 2025-ம் ஆண்டுக்கான மிகவும் அழகான ஆண்களைக் கொண்ட நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், இந்தியா 7-வது இடத்தை பிடித்துள்ளது. மேலே, முதல் 10 இடங்கள் பிடித்த நாடுகளின் பட்டியலை, போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE பண்ணுங்க.
News November 26, 2025
அரசியலமைப்பின் கையெழுத்து பிரதி இருப்பது தெரியுமா?

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கையெழுத்து பிரதி இன்றும் பாதுகாக்கப்படுவது உங்களுக்கு தெரியுமா? ஆம், நாடாளுமன்றத்தில், நைட்ரஜன் வாயுவால் நிரப்பப்பட்ட கண்ணாடி குமிழில் அது பாதுகாக்கப்படுகிறது. அரசியலமைப்பு கருப்பு மையால் எழுதப்பட்டுள்ளதால், அது விரைவில் ஆக்ஸிஜனேற்றம் அடையும். எனவே அதை தடுக்கவும், சூரிய ஒளி மற்றும் காற்று மாசுவில் இருந்து பாதுகாக்கவும் நைட்ரஜன் வாயு கொண்டு பராமரிக்கப்படுகிறது.
News November 26, 2025
அரசியலமைப்பின் மாண்பை காக்க உறுதியேற்போம்: விஜய்

இந்திய அரசியலமைப்பு தினத்தை கொண்டாடும் இந்நாளில் அதன் மாண்பையும், அது வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளையும் காக்க உறுதியேற்போம் என விஜய் தெரிவித்துள்ளார். இதுபற்றி X-ல் அவர், தவெகவின் கொள்கை தலைவர் அம்பேத்கர் தலைமையிலான குழு, உலகிலேயே சிறந்த அரசியலமைப்பு சட்டத்தை இயற்றி மக்களுக்கு அளித்துள்ளதாக கூறியுள்ளார். அரசியலமைப்பானது, வேற்றுமையில் ஒற்றுமை காண வழிவகை செய்துள்ளதாகவும் விஜய் குறிப்பிட்டுள்ளார்.


