News February 5, 2026
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹4,640 குறைந்தது

தங்கம் விலை சவரனுக்கு ₹22,000 வரை குறைந்த நிலையில், மீண்டும் இந்த வார தொடக்கம் முதல் உயரத் தொடங்கியது. இந்நிலையில், இன்று (பிப்.5) சவரனுக்கு ₹4,640 குறைந்து நகைப் பிரியர்களை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது. 1 கிராம் தங்கம் விலை ₹580 குறைந்து ₹14,320-க்கும், சவரன் ₹4,640 குறைந்து ₹1,14,560-க்கும் விற்பனையாகிறது.
Similar News
News February 12, 2026
ரேஷன் கடைகளில் அயோடின் உப்பு.. அரசு தகவல்

ரேஷன் கடைகளில் இரும்பு சத்து மற்றும் அயோடின் கலந்த இரட்டை செறிவூட்டப்பட்ட உப்பு பாக்கெட்டுகளை வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் 52% பேர் போதிய இரும்புச் சத்து இல்லாமல் ரத்த சோகையுடன் உள்ளதாகவும், இதை தடுக்கவே இந்த உப்பு பாக்கெட்டுகள் ரேஷன் கடைகள் மூலம் வழங்கவுள்ளதாகவும் கூறியுள்ளனர். விரைவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றனர்.
News February 12, 2026
உணவு டெலிவரியில் களமிறங்கும் Flipkart!

உணவு டெலிவரியில் Swiggy, Zomato ஆகியவற்றுக்கு போட்டியாக Flipkart-ம் களமிறங்க உள்ளது. மே அல்லது ஜூன் மாதம் முதல் Flipkart உணவு டெலிவரி வசதியை கொண்டுவரவுள்ளதாம். முன்னோட்டமாக பெங்களூருவில் தொடங்கப்படும் இந்த திட்டம், 2026 இறுதி அல்லது 2027 தொடக்கத்தில் நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும் என கூறப்படுகிறது. 2025-ம் ஆண்டு இந்தியாவில் உணவு டெலிவரி சந்தை சுமார் ₹814 கோடி வருவாயை ஈட்டியுள்ளதாம்.
News February 12, 2026
டிகிரி போதும்.. வங்கியில் ₹48,000 சம்பளம்!

தமிழகம் & பாண்டிச்சேரியில் SBI வங்கியில் 165 Circle Based Officers காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன *வயது: 21- 30 *கல்வித்தகுதி: Engineering, Medicine, Cost accounting, Chartered accounting *தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்காணல் & உள்ளூர் மொழித் திறன் தேர்வு * பிப்.18-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் *சம்பளம்: ₹48,480 *ஆன்லைனில் விண்ணப்பிக்க <


