News January 8, 2026
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹400 குறைந்தது!

ஆபரண தங்கத்தின் விலை இன்று (ஜன.8) கிராமுக்கு ₹50 குறைந்து ₹12,750-க்கும், சவரனுக்கு ₹400 குறைந்து ₹1,02,000-க்கும் விற்பனையாகிறது. ஒரு வாரமாக சவரனுக்கு ₹3,440 வரை உயர்ந்த நிலையில், <<18789381>>நேற்று மாலை<<>> முதல் விலை குறைந்து வருவதால், பொங்கல் பண்டிகையையொட்டி நகை வாங்க நினைத்த நடுத்தர மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
Similar News
News January 22, 2026
வேலூரில் வீட்டின் பூட்டை உடைத்து துணிகர கொள்ளை!

பிள்ளையார்குப்பம் பகுதியை சேர்ந்தவர் மதர்கான் (62). இவர் கடந்த 19-ம் தேதி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தனது மனைவியுடன் சென்றார். நேற்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய தமபதி வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 12 கிராம் தங்கம், 400 கிராம் வெள்ளி மற்றும் ரூ.4,500 திருடபட்டத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்த சத்துவாச்சாரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 22, 2026
நடிகர் கமல் ராய் காலமானார்.. குவியும் அஞ்சலி

நடிகை ஊர்வசியின் குடும்பம் சோகத்தில் மூழ்கியுள்ளது. உயிர்துணையாக இருந்த அவரது சகோதரர் கமல் ராய் (54) மாரடைப்பால் காலமானார். ‘புதுசா படிக்கிறேன் பாட்டு’ என்ற தமிழ் படம் மூலம் நடிப்பு பயணத்தை தொடங்கிய அவர் மலையாளத்தில் ‘தி கிங் மேக்கர்’, ‘லீடர்’ உள்ளிட்ட படங்கள் மூலம் கவனம் பெற்றார். இவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள இயக்குநர் வினயன், அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
News January 22, 2026
வைத்திலிங்கம் திமுகவிற்கு வந்தது ஏன்? திருச்சி சிவா

வைத்திலிங்கம் திமுகவிற்கு வந்ததை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம் என திருச்சி சிவா கூறியுள்ளார். மேலும், CM ஸ்டாலின் மீதும், அவரது ஆட்சித்திறன், செயல்பாடு மீதும் நம்பிக்கை வைத்து திமுகவை நாடி வைத்திலிங்கம் வந்திருக்கிறார் என்று தெரிவித்துள்ளார். அத்துடன் திமுக – காங்கிரஸ் கூட்டணி குறித்து பேசுகையில், எங்கள் உறவு மிக சிறப்பாக இருக்கிறது. நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம் எனவும் அவர் பேசியுள்ளார்.


