News December 6, 2025

BREAKING: தங்கம் விலை சரசரவென மாறியது

image

கடந்த 2 நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்த நிலையில், இன்று அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹320 உயர்ந்து ₹96,320-க்கும், கிராமுக்கு ₹40 உயர்ந்து ₹12,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Similar News

News April 2, 2026

கேஸ் தட்டுப்பாட்டால் திணறும் அம்மா உணவகங்கள்

image

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடால் அம்மா உணவகங்களில் உணவு வகைகள் குறைக்கப்பட்டுள்ளது மக்களை சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது. பெரும்பாலும் காலையில் இட்லி இல்லாமல் பொங்கல் மட்டும் வழங்கப்படுகிறதாம். மதியம் சாம்பார் சாதம் & தயிர் சாதம் மட்டும், இரவில் சப்பாத்திக்கு பதில் தக்காளி சாதம் வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. கொடுக்கப்படும் உணவின் அளவும் குறைவாகவே அளிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

News April 2, 2026

8 தொகுதிகளில் நேருக்கு நேர் மோதும் தேசிய கட்சிகள்

image

தமிழகத்தில் 8 தொகுதிகளில் தேசியக் கட்சிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. உதகை, அறந்தாங்கி, விளவங்கோடு, கிள்ளியூர், குளச்சல் ஆகிய தொகுதிகளில் காங்., – பாஜக நேரடியாக போட்டியிடுகிறது. பத்மநாபபுரம், கந்தவர்வகோட்டை தொகுதிகளில் பாஜக vs CPM என்றும், தளி தொகுதியில் பாஜக vs CPI என்றும் களம் உள்ளது. காங்., பாஜக இரண்டும் எந்தவொரு தனித் தொகுதியிலும் நேரடியாக போட்டியிடவில்லை.

News April 2, 2026

விவசாய கடன் தள்ளுபடி: திமுக கூட்டணி புதிய விளக்கம்

image

அதிமுக, விவசாய தள்ளுபடிக்கு வாக்குறுதி அளித்துள்ளது. ஆனால், திமுகவின் வாக்குறுதியில் அது இடம் பெறாததால் பேசு பொருளானது. இந்நிலையில், இது தொடர்பாக ஸ்டாலினிடம் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார். அப்போது, புதிய கூட்டுறவு சட்டப்படி, மத்திய அரசு அனுமதி கொடுத்தால்தான் கடன் தள்ளுபடி செய்ய முடியும் என்பதாலேயே திமுக வெளியிட்ட வாக்குறுதியில் அவை இடம்பெறவில்லை என ஸ்டாலின் கூறியதாக பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!