News February 3, 2026

BREAKING: தங்கம் விலை.. அதிர்ச்சி தகவல்

image

கடந்த 3 நாள்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ₹22,800 குறைந்து நகைப் பிரியர்களை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தியது. ஆனால், <<19039267>>இன்று 2 முறை விலை உயர்ந்ததால்<<>> பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், சர்வதேச சந்தையிலும் தங்கம் விலை $250.46 வரை (இந்திய மதிப்பில் ₹22,633) உயர்ந்துள்ளதால், வரும் நாள்களிலும் விலை உயரக்கூடும் என கூறப்படுகிறது.

Similar News

News February 19, 2026

மீண்டும் SIR பணிகள்!

image

தேர்தலையொட்டி தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களில் SIR பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் விடுபட்டுள்ள ஆந்திரா, அருணாச்சலப் பிரதேசம், சண்டிகர், ஹரியானா, மகாராஷ்டிரா, டெல்லி, ஒடிசா, பஞ்சாப், சிக்கிம், திரிபுரா உள்ளிட்ட 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் SIR பணிகள் நடைபெறவுள்ளன. வரும் ஏப்ரல் மாதம் முதல் இப்பணிகள் தொடங்கும் என ECI அறிவித்துள்ளது.

News February 19, 2026

திருமணமான ஆண்களுக்கு மட்டும்…

image

திருமணமான ஆண்களுக்கு தொப்பை வளர்வது நார்மல் தான். ஆனால், அது உடல்நலனுக்கு கேடு என்கிறது போலந்து ஆய்வு. பேச்சிலர் ஆண்களைவிட, திருமணமான ஆண்களுக்கு உடல்பருமன் அதிகரிக்கும் வாய்ப்பு 3.2 மடங்கு உள்ளதாம். ஆனால், பெண்கள் குண்டாவதற்கும் திருமணத்துக்கும் பெரிய தொடர்பில்லையாம். அதனால் என்ன என்கிறீர்களா? உடல்பருமன் அதிகரித்தால் BP முதல் கிட்னி பிரச்சனை வரை எண்ணற்ற நோய்கள் வரும் வாய்ப்பு அதிகமாகும். ALERT!

News February 19, 2026

தமிழகத்தில் 250 நாள் வெயில் கொளுத்தும்… ஷாக் ரிப்போர்ட்

image

தமிழகத்தில் அதிக வெப்பநிலை நிலவும் நாள்களின் எண்ணிக்கை வரும் 2050-க்குள் ஆண்டுக்கு 200 முதல் 250 நாள்களாக உயரும் என அரசின் அண்மை ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதன்படி, சென்னை, கோவை, திருநெல்வேலி, திருச்சி ஆகிய மாவட்டங்களில் வெப்ப தாக்கம் அதிகம் இருக்குமாம். கட்டுமானங்கள், குப்பை கிடங்குகள் அதிகரிப்பு ஆகியவை முக்கிய காரணங்களாம். சென்னையில் தான் வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாக இருக்குமாம்.

error: Content is protected !!