News November 11, 2025
BREAKING: தங்கம் விலையில் மிகப்பெரிய மாற்றம்

தங்கம் விலை இன்று(நவ.11) ஒரே நாளில் சவரனுக்கு ₹1,760 அதிகரித்துள்ளது. 22 கேரட் 1 கிராம் ₹11,700-க்கும், சவரன் ₹93,600-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை மீண்டும் உயர்வு, இந்திய பங்குச்சந்தைகள் சரிவு உள்ளிட்ட காரணங்களே நம்மூரில் தங்கம் விலை உயர காரணம் என வணிக நிபுணர்கள், தங்க நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News November 11, 2025
இலவச வீட்டு மனை.. அரசு புதிய அறிவிப்பு

சென்னை போன்ற மாநகராட்சிகளை சுற்றியுள்ள பெல்ட் ஏரியாக்களில் பட்டா வாங்குவது தொடர்பாக, அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. முதலில் விண்ணப்பிக்கும் இடம் அரசின் புறம்போக்கு இடமாக இருக்க வேண்டும். தேவைப்படும் ஆவணங்கள்: ★பாஸ்போர்ட் அளவு போட்டோ ★ரேஷன் & ஆதார் கார்டு ★சாதி & வருமான சான்றிதழ் ★பட்டா பெற விரும்பும் இடத்தில் 10 ஆண்டுகள் வசித்ததற்கான ஆதாரம் போன்றவற்றை சமர்ப்பிப்பது அவசியம்.
News November 11, 2025
உங்களை பற்றி கூகுள் என்ன நினைக்குது? CHECK THIS

நீங்கள் ஆன்லைனில் செய்யும் விஷயங்களை வைத்து உங்களை பற்றி கூகுள் என்ன தெரிந்துவைத்திருக்கிறது என்பதை அறிந்துகொள்ள ஈஸியான வழி இருக்கிறது. ➤Desktop-ல் Google Ads settings என கூகுளில் Search பண்ணுங்க ➤Ads settings-க்குள் சென்றால் கூகுள் உங்களை பற்றி சேமித்துவைத்திருக்கும் தகவல்கள் காட்டும் ➤இதில் எதையாவது நீங்கள் நீக்க விரும்பினால், தகவலை க்ளிக் செய்து Turn Off கொடுங்கள். SHARE.
News November 11, 2025
கிரிக்கெட் வீராங்கனை பெயரில் ஸ்டேடியம்!

உலகக் கோப்பை வென்ற மகளிர் அணியில் சிறந்த பினிஷராக திகழ்ந்தவர் விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ். இந்நிலையில், அவரது பெயரில் மேற்கு வங்கத்தில் ஒரு கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என அம்மாநில CM மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். முன்னதாக, மாநில அரசின் உயரிய விருதான பங்கா பூஷன் விருதும், காவல்துறையில் DSP பணியும் அவருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


