News March 20, 2026
BREAKING: டீசல் விலை ₹22 உயர்வு

<<19433482>>பிரீமியம் பெட்ரோல்<<>> விலையை தொடர்ந்து, தொழில்துறை டீசல் விலையையும் 25% உயர்த்துவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. தொழில்துறை டீசல் ஒரு லிட்டரின் விலை ₹87.67-ல் இருந்து ₹109.59 ஆக அதிகரித்துள்ளது. மின் உற்பத்தி நிலையங்கள், கட்டுமான நிறுவனங்கள், சுரங்கத் தொழிலில் தொழில்துறை டீசல் பயன்படுத்தப்படுகிறது. இந்த விலையேற்றம் உற்பத்தி துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
Similar News
News April 4, 2026
நானும் மதுரைக்காரன் தான்: சுந்தர்.சி

மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடும் சுந்தர்.சி, மனைவி குஷ்புவுடன் சென்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், தான் வெளியூர்காரன் என்பதே எதிர்க்கட்சியினர் வைக்கும் ஒரே குற்றச்சாட்டு என்றார். நான் வெளியூர்காரன் அல்ல. என் பூர்விகம் பழனி, இனி மதுரை தான் என் ஊர் என்ற அவர், மதுரையில் வீடு பார்த்துவிட்டதாக கூறினார். <<-se>>#TNElection2026<<>>
News April 4, 2026
IPL TOSS: மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்!

MI-க்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற DC பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. உடல்நல குறைவால் இன்றைய போட்டியில் பாண்ட்யா பங்கேற்காததால், சூர்யகுமார் MI கேப்டனாக செயல்படுகிறார். மேலும், தீபக் சஹார், மிட்செல் சாண்ட்னர் ஆகியோரும் களம் காண்கின்றனர். டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இரு அணிகளும் 13 முறை மோதியுள்ள நிலையில், அதிகபட்சமாக DC 7 முறை வென்றுள்ளது.
News April 4, 2026
அண்ணாமலைக்கு பொறுப்பு.. பாஜக புதிய அறிவிப்பு

பாஜக வேட்பாளராக களமிறங்காத அண்ணாமலை, NDA கூட்டணி வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்வேன் என கூறியிருந்தார். இந்நிலையில், அவரது பெயர் பாஜக நட்சத்திர பரப்புரையாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இவர் தவிர, சரத்குமார், குஷ்பு, பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். மேலும், டெல்லி, உ.பி., ம.பி., குஜராத், மகாராஷ்டிரா & அசாம் ஆகிய 6 மாநில பாஜக CM-களும் தமிழகத்தில் பரப்புரை மேற்கொள்கின்றனர்.


