News December 11, 2025
BREAKING: டிச.15 முதல் விருப்ப மனு: EPS

2026 தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் டிச.15 – டிச. 23 வரை விருப்ப மனு பெறலாம் என EPS அறிவித்துள்ளார். முதல் நாளான 15-ம் தேதி மட்டும் நண்பகல் 12 மணிக்கு (நல்ல நேரம்) தொடங்குகிறது. மற்ற நாள்களில் காலை 10 – மாலை 5 மணி வரை விருப்ப மனுவை பெறலாம். மேலும், மனுவில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து, தலைமை அலுவலகத்தில் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 13, 2025
2 போட்டிகளை வைத்து கில்லை எடை போட முடியாது: நெஹ்ரா

SA-க்கு எதிரான டி20 தொடரில் கில் சொதப்பி வருகிறார். இது குறித்து GT கோச் நெஹ்ராவிடம் கேட்டபோது, டி20 போன்ற மிக குறுகிய ஃபார்மெட்டில், 2 போட்டிகளில் விளையாடுவதை வைத்து ஒரு வீரரை எடை போட கூடாது என தெரிவித்துள்ளார். கில் சரியாக ஆடவில்லை என சாம்சன், அவரும் ஆடவில்லை என ருதுராஜ் என வீரர்களை தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருக்க முடியாது என்றும் நெஹ்ரா கூறியுள்ளார்.
News December 13, 2025
₹1,020 கோடி ஊழல்.. “நேரு மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்”

திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்று அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். நகராட்சி நிர்வாகத்துறையில் ₹1,020 கோடி ஊழலும், அரசுப் பணி வழங்க ₹888 கோடி லஞ்சமும் வசூலிக்கப்பட்டது பற்றி DGP-க்கு, ED துல்லியமான ஆதாரங்களை கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் சாடியுள்ளார். ஊராட்சி செயலாளர் தேர்விலும், DMK அரசு தகுதியான இளைஞர்களை நீக்கி மோசடி செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
News December 13, 2025
அமைதிக்கான நோபல் பரிசு வென்றவர் கைது

2023-ல் அமைதிக்கான நோபல் பரிசு வென்ற நர்கஸ் முகம்மாடியை ஈரான் பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். சமீபத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கறிஞர் கோஸ்ரோவ் அலிகோர்டியின் இறுதி சடங்கில் கலந்து கொண்டதால் முகம்மாடி கைது செய்யப்பட்டுள்ளார். ஈரானில் பெண்களின் உரிமைகளுக்காக போராடி 11 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வந்த முகம்மாடி, கடந்த 2024-ல் தற்காலிகமாக விடுவிக்கப்பட்டார்.


