News December 15, 2025
BREAKING: ஞானசேகரன் மீதான குண்டம் சட்டம் ரத்து

அண்ணா யுனிவர்சிட்டி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையில் உள்ள ஞானசேகரன் மீதான குண்டர் சட்டத்தை சென்னை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. அவரது தாயார் கங்காதேவி தொடர்ந்த மனுவை விசாரித்த கோர்ட், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. கடந்த ஜூன் 2-ம் தேதி சென்னை மகளிர் கோர்ட் அவருக்கு 30 ஆண்டுகள் ஆயுள் தண்டனை, ₹90,000 அபராதம் விதித்த நிலையில் தற்போது அவர் புழல் சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 19, 2025
எத்தனால் கலந்த பெட்ரோலால் பாதிப்பில்லை: மத்திய அரசு

20% எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்படுத்துவதால், வாகனங்களுக்கு பாதிப்பில்லை என்பது ஆய்வுகளில் நிரூபணமாகியுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். ராஜ்யசபாவில், இது பற்றிய MP கமல்ஹாசன் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அவர், பழைய வாகனங்களில் கூட, செயல்திறனில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், வாகனங்களின் மைலேஜுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் கண்டறியப்பட்டதாகவும் அவர் விளக்கமளித்தார்.
News December 19, 2025
இந்தியா அபார வெற்றி.. வரலாற்று சாதனை

U19 ஆசிய கோப்பை செமி ஃபைனலில் இந்தியா 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஃபைனலுக்கு முன்னேறியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 8 விக்கெட்களை இழந்து 138 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் ஆயுஷ் மாத்ரே (7*), வைபவ் (9*) அடுத்தடுத்து அவுட்டாகி அதிர்ச்சி கொடுக்க, ஆரோன் ஜார்ஜ் (58), விஹான் மல்ஹோத்ரா (61) ஜோடி அதிரடி காட்டி வெற்றிக்கு வித்திட்டனர்.
News December 19, 2025
5th T20: இந்தியா பேட்டிங்

5-வது மற்றும் கடைசி டி20-ல் டாஸ் வென்ற தெ.ஆப்பிரிக்கா பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியினர் பேட்டிங் செய்யவுள்ளனர். 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என இந்தியா முன்னிலை வகித்து வருகிறது. தொடரை வெல்ல இந்தியாவும், தொடரை சமன் செய்ய தெ.ஆப்பிரிக்காவும் முனைப்பு காட்டும் என்பதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.


