News January 9, 2026
BREAKING: ஜனநாயகனுக்கு U/A சான்று வழங்க உத்தரவு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்திற்கு உடனடியாக U/A <<18789661>>தணிக்கை சான்றிதழ்<<>> வழங்க வேண்டும் என தணிக்கை வாரியத்திற்கு மெட்ராஸ் HC உத்தரவிட்டுள்ளது. மறு தணிக்கைக்கு அனுப்பிய உத்தரவையும் நீதிபதி ஆஷா ரத்து செய்துள்ளார். முன்னதாக, தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் ஜனநாயகன் ரிலீஸை ஜன.9-ல் (இன்று) இருந்து ஒத்திவைப்பதாக தெரிவித்த படக்குழு, புதிய ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறியிருந்தது.
Similar News
News February 19, 2026
பிரபல நடிகை மரணம்: அந்த நோய் வராமல் தடுக்க..

பிரபல நடிகை <<19166313>>ராஷ்மி லீலா<<>>, Pulmonary Fibrosis என்ற நுரையீரல் பிரச்னையால் மரணமடைந்தார். நுரையீரலை பாதிக்கும் இந்த நோய் வராமல் தடுக்க, ➤புகைப்பழக்கம் இருக்கக்கூடாது ➤புகைப்பிடிப்பவரின் அருகில் இருக்க கூடாது ➤தூசி, ரசாயனங்கள் ஆகியவற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள வேண்டும் ➤உடற்பயிற்சி செய்வது அவசியம் ➤நிமோனியா தடுப்பூசி போடுங்கள் ➤நோய் பரவும் காலங்களில் கூட்டத்தில் செல்வதை தவிர்க்கவும்.
News February 19, 2026
திமுக-தேமுதிகவுக்குள் இருந்த சண்டை.. THROWBACK

சமீபத்தில், ’தேமுதிக எல்லாம் ஒரு கட்சியா’ என ராஜகண்ணப்பனும், பதிலுக்கு ’ராஜகண்ணப்பன் யாருன்னு மக்களுக்கு தெரியும்’ என பிரேமலதாவும் மாறி மாறி <<19106925>>சாடியிருந்தனர்<<>>. இதனால் திமுக-தேமுதிக கூட்டணி கைகூடாது என பேசப்பட்டது. ஆனால் திடீர் ட்விஸ்டாக, கடந்த வாரம் வரை அடித்துக்கொண்டவர்கள், தற்போது கூட்டணி அமைத்துள்ளனர். அரசியல் களமும் ’அண்ணன் ஸ்டாலின்’ & ’அன்பு சகோதரி பிரேமலதா’ என மாறியுள்ளது. உங்கள் கருத்து?
News February 19, 2026
தேமுதிக வரவு பெருமகிழ்ச்சி அளிக்கிறது: ஸ்டாலின்

திமுக கூட்டணியில் இணைந்த தேமுதிகவை ஸ்டாலின் வருக வருக என வரவேற்றுள்ளார். தனது X பக்கத்தில், கருணாநிதி மேல் மாறாத அன்பு கொண்டவரும், எனது அன்பு நண்பருமான கேப்டன் விஜயகாந்த் உருவாக்கிய தேமுதிக இன்று கூட்டணியில் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது என்றும், கருப்பு சிவப்பை கொடியில் தாங்கியிருக்கும் தங்களது நல்வரவு – நல்லுறவு தொடர்ந்து TN உயர்வுக்கு பங்களிக்கட்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


