News August 8, 2024
BREAKING: சேலம் எஸ்பி மாற்றம்

சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்துவரும் ஏ.கே.அருண் கபிலன் நாகை எஸ்பியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக கவுதம் கோயல் புதிய எஸ்பியாக நியமனம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இவர் தற்போது தாம்பரம் பள்ளிக்கரணை சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக இருந்துவருகிறார். அதேபோல் சேலம் மாநகர தெற்குப்பகுதி காவல் துணை ஆணையராக இருந்துவரும் மதிவாணன் வேலூர் எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.
Similar News
News July 5, 2025
ரேஷன் கார்டுகள் செல்லாது? உண்மை என்ன

சேலம்: ஜூன் 30-ந்தேதிக்குள் ரேஷன் கார்டுடன் கைரேகை அப்டேட் செய்யாவிட்டால் ரேஷன் கார்டு செல்லாது என்ற செய்தி வதந்தி என அரசு தெளிவுபடுத்தியுள்ளது. AAY மற்றும் PHH அட்டைதாரர்கள் அனைவரும் கைரேகை பதிவு செய்வது அவசியம், ஆனால் அதற்கான கடைசி தேதி வரையறுக்கப்படவில்லை. இருப்பினும் சேலம் மக்களே உங்கள் அருகில் உள்ள ரேஷன் கடைகளில் கைரேகை அப்டேட் செய்து கொள்ளுங்கள்!
News July 5, 2025
திருச்செந்தூர் செல்லும் பக்தர்களுக்கு குட் நியூஸ்

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வரும் ஜூலை 07- ல் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில் பக்தர்களின் வசதிக்காக இன்று (ஜூலை 05) முதல் ஜூலை 08 வரை சேலம் கோட்டம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சேலம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இன்று 2 விரைவு பேருந்துகளும், நாளை 2 விரைவு பேருந்துகளும் இயக்கப்படுகிறது என அதிகாரிகள் தகவல்!
News July 5, 2025
கிராம நத்தம் பட்டா இனி ஆன்லைனில் எளிதாகப் பெறலாம்

கிராம நத்தம் பகுதிகளுக்கான நத்தம் பட்டாக்களை<