News December 15, 2025

BREAKING: சென்னை அண்ணா பல்கலை., வழக்கில் திருப்பம்!!

image

தமிழகத்தையே உலுக்கிய சென்னை அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், ஞானசேகரனை குண்டர் சட்டத்தில் அடக்க பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உய்ரநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. ஞானசேகரரின் தயார் குண்டர் சட்டத்தில் அடைக்க பிறப்பித்த உத்தரவை நீக்க மேல் முறையீடு செய்தது குறிப்பிடத்தக்கது.

Similar News

News March 4, 2026

குஜராத் வரை சென்று அதிரடி காட்டிய சென்னை போலீஸ்!

image

சென்னை பூக்கடை ரெட்டி ராம் தெருவில் ஜன.25 ஆம் தேதி கடை ஷட்டர் பூட்டை உடைத்து, ரமேஷ்குமார் ஜெயின் (55) கடையில் ₹1,30,000 மற்றும் எதிர்கடையில் ₹65,000 திருடப்பட்டதாக C-1 பூக்கடை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சிசிடிவி பதிவுகள் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களில் பதுங்கியிருந்த ஈஸ்வர் (42), கன்பத் சிங் (38) ஆகிய இருவரை நேற்று கைது செய்தனர்.

News March 4, 2026

விரைவில் வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை!

image

சென்னை பிரிவில் புதிதாக கட்டப்பட்ட வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் பாதைகளை தில்லி ரயில்வே பாதுகாப்பு தலைமை ஆணையர் ஜனக் குமார் கார்க் மார்ச் 5ஆம் தேதியன்று ஆய்வு மேற்கொள்ள உள்ளார். அதே நாள் மதியம் 1.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை அதிவேக சோதனை ஓட்டமும் நடைபெறும். மேலும், மார்ச் 10 முதல் இந்த வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

News March 3, 2026

பள்ளிக்கரணை சதுப்பு நிலம்: NGT உத்தரவை எதிர்த்து வழக்கு

image

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி 1 கி.மீ. சுற்றளவில் புதிய கட்டுமானங்களுக்கு ஒப்புதல் வழங்க தேசிய பசுமை தீர்ப்பாய (NGT) தடை பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கில், 3 வாரங்களில் தமிழக அரசு மற்றும் பெருநகர வளர்ச்சி குழுமம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தீர்ப்பாய உத்தரவால் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!