News August 19, 2025

BREAKING: சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து

image

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று (ஆக.19) பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 5வது மாடியில் மிக்ஸியால் மின் கசிவு ஏற்பட்டு இந்த தீ விபத்து நிகழ்ந்துள்ளது. தீ 6 வது மாடிக்கும் மளமளவென பரவியதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. தகவலறிந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர்.

Similar News

News August 19, 2025

கோயம்பேடு- பட்டாபிராம் வரை மெட்ரோ ரயிலுக்கு அனுமதி

image

தமிழ்நாடு அரசு சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் 21.76 கி.மீ நீளமுள்ள கோயம்பேடு–ஆவடி–பட்டாபிராம் பாதைக்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்தப் பணிக்காக நிலம் கையகப்படுத்தல் மற்றும் உபயோக வசதிகள் மாற்றுதல் செலவுக்காக ₹2,442 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கவுள்ளன. இந்த புதிய வழித்தடம், கோயம்பேட்டிலிருந்து ஆவடி பட்டாபிராம் பகுதிகளை நேரடியாக மெட்ரோ இணைப்பதன் மூலம் போக்குவரத்து எளிமையாகும்.

News August 19, 2025

BIG NEWS: சென்னையில் நாய் கடித்து ஒருவர் பலி

image

சென்னை குமரன் நகர் பகுதியில் வளர்ப்பு நாய் கடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் வளர்த்து வந்த பிட்புல் ரக நாய் கடிதத்தில் கருணாகரன்(55) என்பவர் உயிரிழந்தார். அவரை அந்த நாய் தொடை, கழுத்து பகுதிகளில் கடித்துள்ளது. மேலும் நாயின் உரிமையாளர் பூங்கொடியும் காயமடைந்துள்ளார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இது தடை செய்யப்பட்ட நாய் என்பது குறிப்பிடத்தக்கது.

News August 19, 2025

சென்னையில் இலவசமாக பட்டா பெறலாம் 1/2

image

சென்னையில் சொந்த வீடு இல்லாமல் அரசு புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் ஏழை, எளிய குடும்பங்களுக்கு, ‘இலவச வீட்டு மனை பட்டா வழங்கும்’ திட்டத்தின் கீழ் தாங்கள் வசித்து வரும் நிலத்திற்கு பட்டா பெற முடியும். நிலம் ஆட்சேபனையற்ற நிலமாக இருந்தால், சென்னை மாநகராட்சி மக்களுக்கு 1 செண்டு நிலம் இலவசமாக பெற முடியும். <<17451623>>விண்ணப்பிக்கும் முறை தெரிந்து கொள்ள இங்கு கிளிக் பண்ணுங்க<<>>. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!