News December 31, 2025

BREAKING: சென்னையில் போக்குவரத்து மாற்றம்

image

புத்தாண்டை முன்னிட்டு சென்னையில் இன்று இரவு முதல் நாளை காலை வரை போக்குவரத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து வாகனங்களும் கலங்கரை விளக்கம் சந்திப்பு வழியாக மட்டுமே செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காமராஜர் சாலை போர் நினைவிடம் முதல் கலங்கரை விளக்கம் வரை இரவு 10 மணி முதல் வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. சென்னையின் அனைத்து மேம்பாலங்களும் இன்று இரவு 10 மணிக்கு மூடப்படவுள்ளது. ஷேர் பண்ணுங்க.

Similar News

News February 5, 2026

நடிகர் விஜய் வழக்கில் நாளை தீர்ப்பு!

image

புலி படத்திற்கான ரூ.15 கோடி வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என வருமான வரித்துறை நடிகர் விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதித்திருந்தது. இதனை எதிர்த்து நடிகரும் தவெக தலைவருமான விஜய் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், நாளை காலை 10:30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி தீர்ப்பு வழங்க உள்ளார்.

News February 5, 2026

சென்னை: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

சென்னையில் வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிஞ்சுக்கோங்க. ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம். ஷேர்!

News February 5, 2026

சென்னை: ஆதார் அட்டை வைத்துள்ளோர் கவனத்திற்கு!

image

சென்னை மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி இ-சேவை மையத்திற்கு செல்ல வேண்டாம். எந்த அலைச்சலும் இல்லாமல், வீட்டில் இருந்தபடியே <>இங்கே கிளிக் செய்து<<>> மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும், ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

error: Content is protected !!