News October 28, 2025
BREAKING: சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை!

மொந்தா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாளை (அக்.28) சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், தேவையின்றி வெளியே செல்வதை தவிர்த்து வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
Similar News
News October 28, 2025
கண்ணகி நகர்: கார்த்திகாவை சந்தித்த முன்னாள் ஆளுநர்

ஆசிய அளவில் நடைபெற்ற கபடி போட்டியில் தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ள கார்த்திகாவிற்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் நேரில் சென்று, வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தற்போது பாஜக மூத்த தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் சென்னை கண்ணகி நகருக்கு சென்று கபடி வீராங்கனை கார்த்திகாவை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்து மாலை அணிவித்தார்.
News October 27, 2025
சென்னையில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

சென்னை மாவட்டத்தில் இன்று (அக்.27) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 27, 2025
புயலாக மாறிய ‘மோன்தா’

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (அக்.27) புயலாக மாறியது. மோன்தா என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல், காலையில் 14 கிமீ வேகத்தில் நகர்ந்து வந்தது. தற்போது சென்னையில் இருந்து 480 கிமீ தொலைவில் உள்ளது. திடீரென வேகம் அதிகரித்து 18 கிமீ வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டு துறைமுகங்களில் 2ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.


