News January 19, 2026
BREAKING: செங்கோட்டையன் முடிவை மாற்றினார்

திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களை சேர்ந்த அதிமுக Ex அமைச்சர்கள் இருவரை தவெகவில் இணைக்க செங்கோட்டையன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். ஆனால், அவர்கள் பிடி கொடுக்காததால், தனது கவனத்தை தற்போது திருப்பூரை சேர்ந்த ஒரு Ex அமைச்சரின் பக்கம் திருப்பியுள்ளார். குறிப்பாக, வரும் தேர்தலில் சீட்டு மறுக்கப்பட்டதால் அந்த Ex அமைச்சர், EPS மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News January 31, 2026
தீவிர சிகிச்சை பிரிவில் H.ராஜா.. என்னாச்சு?

பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் H.ராஜா அப்பல்லோ ஹாஸ்பிடலில் ICU-வில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனியார் டிவி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, அவர் திடீரென மயங்கி விழுந்தார். மூளை பக்கவாதம் என கருதி முதலில் அருகிலுள்ள ஹாஸ்பிடலுக்கும், பின்னர் அங்கிருந்து அப்பல்லோவுக்கும் அழைத்து செல்லப்பட்டார். தற்போது ICU-வில் அவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது உடல்நிலை தேறி வருவதாக தகவல் வந்துள்ளது.
News January 31, 2026
தங்கம் விலை தலைகீழாக குறைகிறது!

சர்வதேச சந்தையில் தங்கம் விலை 9 சதவீதம் அதிரடியாக குறைந்துள்ளது. நேற்று ஒரு அவுன்ஸ் (28.35g) தங்கத்தின் விலை $5,595.46-ஆக உச்சத்தை எட்டியது. இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் $434.45 குறைந்து $4,895-க்கு விற்பனையாகிறது. அதேபோல் வெள்ளியும் $29.16 ஆக சரிவை எட்டியுள்ளது. இதன் காரணமாக இன்று இந்திய சந்தையிலும் தங்கம், வெள்ளி விலை குறைய வாய்ப்புள்ளது.
News January 31, 2026
வேணுகோபால் வருகை வெற்றி பெறுமா?

திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த காங்., பொதுச்செயலாளர் KC வேணுகோபால் நாளை TN-க்கு வருகை தர உள்ளார். தொகுதி பங்கீடு, ஆட்சியில் பங்கு என கேட்கும் மாணிக்கம் தாகூர் கோஷ்டி ஒரு பக்கம், திமுக கூட்டணியில் இருப்பதே போதும் என மல்லுக்கட்டும் SP கோஷ்டி மறுபக்கம் என TN காங்., தகித்து கிடக்கிறது. இந்நிலையில் திமுகவுடன் பேச வரும் வேணுகோபாலின் வருகையை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?


