News September 4, 2025
BREAKING சிவகாசி: பட்டாசு விற்பனை அதிரடி உத்தரவு

ஆன்லைன் பட்டாசு விற்பனை குறித்து விளம்பரம் செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் தலைவர் வழக்கு தொடர்ந்தார். அதில் அன்லைன் பட்டாசு விற்பனை குறித்து புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய, மாநில அரசுகள் தெரிவித்தது. ஆன்லைன் பட்டாசு விற்பனை செய்வது உச்சநீதிமன்ற உத்தரவை மீறும் செயல் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 7, 2025
மல்லாங்கிணறு காவல் நிலையத்திற்கு முதலமைச்சர் விருது

கடந்த 2023 ஆம் ஆண்டிற்கான விருதுநகர் மாவட்ட அளவில் சிறந்த காவல் நிலையமாக மல்லாங்கிணர் காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்பு பரிசு காவலர் நாளில் சென்னையில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் அவர்களிடம் இருந்து மல்லாங்கிணர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மகேஸ்வரன் பெற்றுக் கொண்டார்.
News September 7, 2025
மானிய விலையில் காய்கறி, பழச்செடிகள் தொகுப்பு

விருதுநகர் மாவட்டத்தில் ‘ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்” திட்டத்தின் கீழ் தக்காளி, கத்தரி, வெண்டை, மிளகாய், கொத்தவரை, கீரை வகைகள் போன்ற 6 வகையான விதைகள் அடங்கிய தொகுப்பு 100% மானியத்தில் ரூ.60 வீதம் 41,500 எண்கள் வழங்கப்பட உள்ளது. இதேபோல் பப்பாளி, கொய்யா, எலுமிச்சை பழச்செடித் தொகுப்பு 100% மானியத்தில் 25,850 எண்கள் வழங்கப்பட உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் உழவன் செயலியில் பதிவு செய்யலாம்.
News September 7, 2025
புதிய துணை மின் நிலையம் அமைக்கும் பணி

விருதுநகர், கோட்டூர் கிராமத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மூலம் 745 /400 கிலோ வாட் புதிய துணை மின்நிலையம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது முழுமை பெற்றதை தொடர்ந்து அதனை பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்து கலெக்டர் சுகபுத்ரா தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் இராதாகிருஷ்ணன் இன்று நேரில் சென்று பார்வையிட்டனர்.