News September 8, 2025
BREAKING: சிவகங்கை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் நடைபெறவுள்ள இமானுவேல் சேகரன் 68-வது நினைவு நின நிகழ்ச்சியினை முன்னிட்டு, வருகின்ற 11.9.2025 அன்று சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி வட்டங்கள்/ஒன்றியங்களில் உள்ள பள்ளிகள்/ கல்லூரிகள்/இதர கல்வி நிறுவனங்கள் ஆகியவைகளுக்கு விடுமுறை அளிக்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.
Similar News
News September 9, 2025
சிவகங்கை: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் அரசு பணி

சிவகங்கை மக்களே மத்திய அரசு உளவுத்துறையில் காலியாகவுள்ள 455 காவல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி போதுமானது. இதில் மாத சம்பளமாக ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை வழங்கப்படுகிறது. இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News September 9, 2025
சிவகங்கையில் வீடு புகுந்து செயின் பறிக்க முயற்சி

சிவகங்கை அருகே வண்டவாசியை சேர்ந்தவர் தனஸ்ரீ(22). இவர் வீட்டில் குழந்தையுடன் இருந்த போது ஒரு பெண் தண்ணீர் கேட்டு வந்துள்ளார். தண்ணீர் கொடுத்தபோது அந்த பெண் தனஸ்ரீ கழுத்தில் கிடந்த தங்க செயினை பறித்துள்ளார். உடனே சுதாரித்துக்கொண்ட தனஸ்ரீ வீட்டின் கதவை மூடினார்.கதவை திறக்காவிட்டால் குழந்தையை கொன்று விடுவதாக அப்பெண் மிரட்டிய நிலையில் கதவை திறந்த நிலையில் அவர் தப்பியோடினார்.
News September 9, 2025
காரைக்குடி: பூட்டை உடைத்து 40 பவுன் நகை கொள்ளை

காரைக்குடி, பெரியார் நகரை சேர்ந்த வாணிஸ்ரீ நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு மதுரை பாண்டி கோவிலுக்கு சென்றனர். பின்னர் வீடு திரும்பிய நிலையில் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது 3 பீரோக்களும் உடைக்கப்பட்டு 40 பவுன் நகைகள் கொள்ளை போனது தெரிய வந்தது. கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.