News October 22, 2025

BREAKING: சிவகங்கை பள்ளிகளுக்கு விடுமுறை

image

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் சிவகங்கை கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக சிவகங்கையில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழையின் காரணமாக இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளிக்கு விடுமுறை அறிவிக்கப்ட்டுள்ளது.

Similar News

News October 22, 2025

தீபாவளிப் பண்டிகையை யொட்டி பதிவான வழக்குகள்

image

சிவகங்கை மாவட்டத்தில் தீபாவளிப் பண்டிகையையொட்டி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் காரைக்குடி, சிவகங்கை, காளையாா்கோவில், தேவகோட்டை போன்ற பகுதிகளில் பொது இடங்களில் மதுபோதையில் தகராறு செய்ததாக 28 வழக்குகளும் வாகன விபத்து, மதுபானக் கடையில் தகராறு, பட்டாசு விபத்து உள்பட சம்பவங்களில் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 22, 2025

சிவகங்கை:பட்டாசு வெடித்ததில் 8 பேர் GH-ல் அனுமதி

image

சிவகங்கை மாவட்டத்தில் பட்டாசு வெடிக்கும் போது காயமடைந்த 8 பேர் 108 ஆம்புலன்ஸ் மூலமாக சிவகங்கை மருத்துக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை பகுதிகளில் குடித்துவிட்டு தகராறு செய்ததாக 28 வழக்குகள் போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News October 22, 2025

சிவகங்கை: உங்கள் வீட்டில் மின்சார தடையா..

image

சிவகங்கை தமிழ்நாடு முழுவதும் தற்பொழுது தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதால் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக மின்சார வாரியம் உதவி எண் அறிவித்துள்ளது மின்சேவைகள், மின்கம்பி அறுந்து தொங்கிக் கொண்டிருந்தாலோ, மின்கம்பங்கள் உடைந்திருந்தாலோ, சாய்ந்திருந்தாலோ சேவை மையமான மின்னகத்தை 9498794987 பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!