News October 19, 2024
BREAKING: சிறுத்தை தாக்கி 3 வயது குழந்தை உயிரிழப்பு

கோவை, வால்பாறை அடுத்த ஊசிமலை தேயிலை தோட்டப் பகுதியில் சிறுத்தை தாக்கி 3 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநில தொழிலாளர்களின் குழந்தை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது சிறுத்தை தாக்கியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News July 9, 2025
கோவை: பெண்களுக்கு ரூ.50,000 திருமண உதவி!

தமிழக அரசு சார்பில், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திட்டம் 1-ல் ரூ.25,000, திட்டம் 2-ல் ரூ.50,000 உதவித்தொகையோடு, தாலி செய்வதற்காக 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க, கோவை மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்திற்கு நேரில் சென்றோ அல்லது தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். SHARE IT <<17007876>>(தொடர்ச்சி 1/2)<<>>
News July 9, 2025
திட்டத்திற்கான தகுதிகள் என்ன?

▶️அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவி திட்டம் – 1 இன் கீழ் உதவித்தொகை (ரூ.25,000) பெற கல்வித் தகுதி தேவையில்லை ▶️ திட்டம் – 2 இன் கீழ் உதவித்தொகை (ரூ.50,000) பெற டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் ▶️ விண்ணப்பதாரர் பெற்றோர்களால் கைவிடப்பட்ட அல்லது பெற்றோர்களை இழந்தவராக இருக்க வேண்டும் ▶️ திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்பாகவே விண்ணப்பிக்க வேண்டும்.
News July 9, 2025
காவலர், உதவியாளர் வேலைக்கு விண்ணப்பிக்கும் முறை

▶️அரசு அலுவலக காவலர், உதவியாளர் பணிக்கு கணினி சார்ந்த தேர்வு கோவையில் நடைபெறும்.
▶️இதற்கு விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள தகுதிகளை சரிபார்த்துக் கொள்ளவும்.
▶️இதற்கு விண்ணப்பிக்க ரூ.100 கட்டணமாகும். SC/ST/pWbd/ESM மற்றும் பெண்களுக்கு கட்டணமில்லை
▶️உரிய ஆவணங்களுடன் https://ssc.gov.in/home/apply எனும் இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம். SHARE IT