News November 14, 2025
BREAKING: சற்றுநேரத்தில் நாடே எதிர்பார்க்கும் தீர்ப்பு

பிஹார் பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு (மக்களின் தீர்ப்பு) தொடங்குகிறது. கருத்துக்கணிப்புகள் NDA-க்கு சாதகமாக வந்திருக்கிறது. ஆனால், கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி தங்கள் கூட்டணியே வெற்றிபெறும் என்று ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி கூறியிருக்கிறார். வெற்றிப்பெறபோவது யார் என்று ஒட்டுமொத்த நாடும் எதிர்பார்த்து காத்திருக்கின்றன.
Similar News
News November 14, 2025
தேஜஸ்வி யாதவ் முன்னிலை

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடந்து வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும் நிலையில், ரகோபூர் தொகுதியில் தேஜஸ்வி யாதவ் முன்னிலை வகிக்கிறார். இந்த தொகுதியில் பாஜக சார்பாக சதீஸ் குமார் என்பவர் வேட்பாளராக உள்ளார். ஆனால் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 80-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
News November 14, 2025
பிஹார் தேர்தல்.. பாஜக முன்னிலை

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் நொடிக்கு நொடி மாற்றம் நிகழ்கிறது. ஜேடியூ – பாஜக கூட்டணி மீண்டும் முன்னிலை பெற்றுள்ளது. தற்போதைய நேர நிலவரப்படி, BJP -39, JDY -30, LJP(RV) 3 என மொத்தம் 72 இடங்களில் NDA கூட்டணியும், RJD – 33, cong – 8, CPI (ML) 3 என MGB கூட்டணி 44 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.
News November 14, 2025
வடசென்னைக்கு பிறகு என் நிலை இதுதான்: ஆண்ட்ரியா

‘வடசென்னை’ பட சந்திரா கேரக்டருக்கு பிறகு எந்த பட வாய்ப்புகளும் தனக்கு வரவில்லை என்று ஆண்ட்ரியா வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். ஏனென்றால், தன்னை வைத்து என்ன செய்வதென்று யாருக்கும் தெரியவில்லை என்ற அவர், உண்மையில் பல நடிகர்கள், தங்கள் படங்களில் பவர்ஃபுல் பெண் கேரக்டர்களை விரும்புவதில்லை என்றும் கூறியுள்ளார். ஆண்ட்ரியாவின் கேரக்டர்களில் உங்களை கவர்ந்தது எது?


