News August 6, 2024
BREAKING கோவை மேயர் தேர்தல் தொடங்கியது

கோவை மேயராக இருந்த கல்பனா தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், மேயர் பதவி காலியானது. இந்த நிலையில், மேயர் பதவிக்கான தேர்தல் சற்றுமுன் தொடங்கி நடைபெற்றுவருகிறது. 100 கவுன்சிலர்களை கொண்ட கோவை மாநகரில் 96% இடங்களில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் உள்ளனர். திமுக சார்பில் ரங்கநாயகி வேட்பாளராக களத்தில் உள்ளார். 4% உள்ள அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் தேர்தலை புறக்கணித்தனர். உங்கள் கருத்து என்ன?
Similar News
News February 7, 2026
கோவை அருகே குழந்தை உயிரிழப்பு

கோவையைச் சேர்ந்த சுதா என்பவருக்கு திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை இல்லை. அவருக்கு, அவரது தங்கை கவிதா ஒரு யோசனை கூறியுள்ளார். அதன்படி, அங்குள்ள ஒரு திருமணமாகாத பெண்ணுக்கு கடந்த 4-ம் தேதி பிறந்த குழந்தையை, ஒரு செவிலியர் உதவியுடன் சுதாவிற்கு பெற்று தந்துள்ளார். ஆனால், குழந்தை பேச்சு மூச்சின்று இருந்ததால் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது குழந்தை உயிரிழந்தது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News February 7, 2026
POWER CUT: கோயம்புத்தூரில் இங்கெல்லாம் மின்தடை

கோவையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (பிப்.7) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, வெரைட்டி ஹால் ரோடு, தியாகி குமரன் மார்கெட், ஒப்பணக்கார வீதி, செல்வபுரம், கெம்பட்டி காலனி, கரும்புக்கடை, ஆத்துப்பாலம் ஒரு பகுதி, உக்கடம் ஒரு பகுதி, கலெக்டர் அலுவலகம், கோவை ரயில் நிலையம், அரசு மருத்துவமனை, லாரிப்பேட்டை, பீடம்பள்ளி, கலங்கல், பாப்பம்பட்டி, கண்ணம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News February 6, 2026
கோவை இரவு ரோந்து போலீசார் விபரம்!

கோவை மாவட்டத்தில் இன்று (06.02.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


