News February 17, 2026

BREAKING: கோவை: அதிமுகவில் ஐக்கியமான பிரபலம்!

image

இந்திய ஜனநாயக கட்சியின் மாநில இணை பொதுச்செயலாளராக பணியாற்றிய மார்ட்டினின் மனைவியும், தவெக முக்கிய நிர்வாகி ஆதவ் அர்ஜூனாவின் மாமியாருமான லீமா ரோஸ் மார்ட்டின் இன்று அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ்ஸை சென்னை பசுமைவழி சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகளுடன் சென்று அதிமுகவில் இணைந்தார். இந்நிகழ்வின் போது EX அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Similar News

News February 19, 2026

ஹோட்டல்களுக்கு விரைவில் கட்டுப்பாடு

image

கோவையில் தேர்தலை முன்னிட்டு விடுதிகள், ஹோட்டல்கள், லாட்ஜுகள், பார்ட்டி ஹால், திருமண மண்டபங்கள் பல்வேறு வாடகை கட்டிடங்களை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மாநகர், புறநகர் பகுதிகளில் உள்ள விடுதிகளில் அறை புக் செய்பவரின் விவரங்களை ஒப்படைப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.

News February 18, 2026

ரூ.2804 கோடியில் புதிய குடிநீர், பாதாள சாக்கடைத் திட்டம்!

image

கோவை மாநகராட்சியில் வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, ரூ.1200 கோடி மதிப்பில் புதிய 24×7 குடிநீர் திட்டமும், ரூ.1604.11 கோடி மதிப்பில் விரிவான பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயார் செய்யப்பட்டுள்ளது. பழைய பாதாள சாக்கடை கட்டமைப்புகளைச் சீரமைக்க ரூ.850 கோடியும், விடுபட்ட பகுதிகளுக்குப் புதிய இணைப்புகள் வழங்கவும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

News February 18, 2026

கோவை: பிறப்பு, இறப்பு சான்று வேண்டுமா? Hi போதும்!

image

கோவை மக்களே, இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவதுறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். (SHARE பண்ணுங்க)

error: Content is protected !!