News January 1, 2026
BREAKING: கோவையில் புத்தாண்டிலும் மிரட்டல்!

கோவை முழுவதும் இன்று புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைக்கட்டியுள்ள நிலையில், கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் இன்று (ஜன.1) 25வது முறையாக வந்தது. இதையடுத்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்ப நாய் உதவியுடன் பழைய, புதிய கட்டிடங்கள் மற்றும் வாகன நிறுத்துமிடங்களில் சோதனை நடத்தினர். எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. பின்னர் மிரட்டல் பொய் என தெரியவந்தது.
Similar News
News January 1, 2026
கோவை: அரசின் முக்கிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377. 2. அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500. 3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090. 4. குழந்தைகளுக்கான அவசர உதவி 1098. 5. முதியோருக்கான அவசர உதவி -1253. 6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033. 7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இந்த பயனுள்ள தகவலை உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் SHARE பண்ணுங்க. அவரச காலத்தில் உதவும்!
News January 1, 2026
கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (01.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News January 1, 2026
கிணத்துக்கடவு: கணவனை கொன்ற மனைவி

கிணத்துக்கடவை அடுத்த தாமரைகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தீஷ். மனைவி இந்திராணி. இந்நிலையில் இந்திராணிக்கு சித்தப்பா வினோத் உடன் தகாதஉறவு இருந்துள்ளது. கணவர் கண்டித்ததால் ஆத்திரமடைந்த இந்திராணி வினோத் மற்றும் நண்பர்கள் இருவருடன் சேர்ந்து கொலை செய்து சேலம் ரயில்வே தண்டவாளத்தில் வீசி சென்றனர். இதனிடையே நேற்று கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் இந்திராணி கணவரை கொலை செய்ததாக சரண் அடைந்துள்ளார்.


