News January 29, 2026
BREAKING: கோவையில் தங்க கட்டிகள் கடத்தல்

வாளையார் சோதனைச் சாவடி வழியாகத் தங்கம் கடத்தப்படுவதாகப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்பேரில், கேரளாவில் இருந்து கோவை நோக்கி வந்த அரசு பேருந்தை வழிமறித்த போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பேருந்தில் பயணித்த நிபின் (29) என்ற இளைஞரின் உடைமைகளைச் சோதனை செய்தபோது, அவர் மறைத்து வைத்திருந்த 6 கிலோ 140 கிராம் எடையுள்ள தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன. பின், அவரை கைது செய்தனர்.
Similar News
News February 9, 2026
கோவை: ரூ.1000 வரலையா? CLICK பண்ணுங்க

கோவை மக்களே, ரூ.1000 வரலையா? மேல்முறையீடு செய்தும் பலன் இல்லையா? அதை தீர்க்க வழி இருக்கு. விடுபட்டவர்களுக்கு ரூ.1000 கிடைக்க அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறைத்தீர்வு பக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. <
News February 9, 2026
கோவை: ரயில்வேயில் வேலை.. எப்படி விண்ணப்பிக்கலாம்?

இந்திய ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1) மொத்த காலிப்பணியிடங்கள்: 22,195
2) வயது வரம்பு: 18 – 33
3) கல்வித் தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி
4) எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
கணினி தேர்வு, உடல் திறன் சோதனை, ஆவண சரிபார்ப்பு, மருத்துவச் சோதனை.
5) விண்ணப்பிக்கும் இணையதளம்: www.rrbapply.gov.in
6) விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 2, 2026
மேலும், விவரங்களுக்கு <
News February 9, 2026
கோயம்புத்தூரில் மர்ம மரணம்! பரபரப்பு

சத்தியைச் சேர்ந்தவர் எபினேசர். இவர் கோவையில் சாலையோரம் தங்கி, கிடைக்கும் வேலைகளைச் செய்து பிழைப்பு நடத்தி வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் ராமநாதபுரம் மேம்பாலத்தின் அடியில் எபினேசர் பலத்த காயங்களுடன் கிடந்தார். உடனடியாக அவரை மீட்ட மக்கள், சிகிச்சைக்காக GH-க்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் உயிரிழந்தார். இது கொலையா? பாலத்தில் இருந்து தவறி விழுந்தாரா? என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


