News December 18, 2025
BREAKING: கோவைக்கு கடும் நெருக்கடி: CM ஸ்டாலின்

அமெரிக்க வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை விரைவில் களைந்திட வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். வரி விதிப்பால் பல லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகள் பறிபோகும் நிலை உள்ளது. குறிப்பாக கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் ஆகிய ஊர்களின் ஏற்றுமதித் துறைகளில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை விரைவில் தீர்க்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News December 25, 2025
கோவை மக்களே: இனி அலைச்சல் வேண்டாம்!

கோவை மக்களே பல்வேறு அரசுச் சேவைகளைப் பெறவதற்காக இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்
1) ஆதார் : https://uidai.gov.in/
2) வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in
3) பான் கார்டு : incometax.gov.in
4) தனியார் வேலைவாய்ப்பு : tnprivatejobs.tn.gov.in
5) கோவை மாவட்ட அறிவிப்புகளை அறிய: shttps://coimbatore.nic.in/
இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News December 25, 2025
JUSTIN: மதுக்கரை அருகே பெண் கொலை?

கோவை மதுக்கரை அடுத்துள்ள திருமலையாம்பாளையம் கல்லுக்குழியில், பெண் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. விரைந்து சென்ற போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன், சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அவர் யார்? எந்த ஊரைச சேர்ந்தவர்? என தெரியவில்லை. கையில் ரமேஷ், எஸ்ஆர்ஆர் எனவும் பச்சை குத்தப்பட்டுள்ளது தெரிந்தது.
News December 25, 2025
கோவை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

கோவை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


