News January 26, 2026
BREAKING: கூட்டணி முடிவை அறிவித்தாா் விஜய்

நட்பு சக்தி இருந்தாலும், இல்லையென்றாலும் <<18953184>>தனியாக நின்று தவெக<<>> வெற்றிபெறும் என விஜய் கூறியிருந்தார். இதனால், தவெக தனித்து போட்டியா என்ற கேள்வி எழுந்தது. இருப்பினும் விஜய் தரப்புடன் புதிய தமிழகம், தேமுதிக, ராமதாஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஒருவேளை சீட் விவகாரத்தில் சமரசம் ஏற்படவில்லை என்றால், தனித்தே போட்டியிடலாம் என கட்சியின் மூத்த தலைவர்களிடம் விஜய் சொல்லிவிட்டாராம்.
Similar News
News January 31, 2026
SIX, FOUR-ஆக பறக்கவிட்ட இஷான் கிஷன்

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி T20 போட்டியில் இந்தியா அதிரடியாக விளையாடி வருகிறது. தொடக்க வீரர்களான அபிஷேக், சஞ்சு அடுத்தடுத்து அவுட்டாகி நடையை கட்டினர். இதன்பின் ஜோடி சேர்ந்த இஷான் கிஷன் – SKY அதிரடியாக விளையாடியதால், IND 13 ஓவர்களில் 155 ரன்கள் குவித்துள்ளது. குறிப்பாக, இஷ் சோதி வீசிய 12-வது ஓவரில் 4, 4, 4, 6, 4, 6 என பறக்கவிட்ட இஷான் கிஷன் சதம் விளாசினார்.
News January 31, 2026
ஹிட்லர், முசோலினி வரிசையில் ஸ்டாலின்: EPS

ஹிட்லர், முசோலினி போன்ற சர்வாதிகாரிகளின் மொத்த உருவமாக CM ஸ்டாலினை தமிழக மக்கள் பார்ப்பதாக EPS விமர்சித்துள்ளார். வடமாநில பெண் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டிய அவர், 6 வயது சிறுமி முதல் பாட்டி வரை ரோட்டில் பாதுகாப்பாக நடந்து செல்ல முடியவில்லை. ஆனால், ரோம் நகரம் பற்றி எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்தது போல், ஸ்டாலின் மகளிர் மாநாடு நடத்துவதாக சாடினார்.
News January 31, 2026
குழந்தை School-க்கு போக பயப்படுதா? இத செய்யுங்க

பள்ளியில் சேர்த்து பல மாதங்கள் ஆகியும் School-க்கு செல்லமாட்டேன் என குழந்தை அடம்பிடித்தால், அவர்களை அடிக்காமல் அவர்களிடம் சில விஷயங்கள் குறித்து பெற்றோர்கள் மனம் திறந்து பேசவேண்டும். ▶சக மாணவர்களுடன் பிரச்னையா என்பது பற்றி பேசுங்கள் ▶பாலியல் தொல்லை போன்ற பிரச்னைகள் இருக்கிறதா என கேளுங்கள் ▶ஆசிரியர்கள் அடிக்கிறார்களா என விசாரியுங்கள். SHARE.


