News January 31, 2026

BREAKING: கூட்டணி முடிவை அறிவித்தார் விஜய்

image

‘I’am not a kingmaker, I will win’ என வரும் தேர்தலில் தனித்து களம் காண்பதை முதல் முறையாக விஜய் உறுதி செய்துள்ளார். NDTV-க்கு அவர் அளித்த நேர்காணலில், தான் என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பதாக அதிரடியாக கூறியுள்ளார். கடந்த சில காலமாக ஆட்சியில் பங்கு எனக் கூறி வந்த தவெக காங்கிரஸ், அமமுக, பாமகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், தற்போது தனித்து களம் காணத் தயாராகியுள்ளது.

Similar News

News February 9, 2026

திமுக ஆட்சியில் கோவை புறக்கணிப்பு: எஸ்.பி.வேலுமணி

image

கோவையில் தெருமுனை பிரசாரத்தை துவக்கிவைத்த பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அதிமுக ஆட்சிக்கு வந்ததும் கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்படும் என்று உறுதியளித்தார். கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் கோவை புறக்கணிக்கப்பட்டதாக குற்றம் சாட்டிய அவர், எந்த திட்டத்தையும் கொண்டுவரவும் இல்லை, கொண்டு வர நிதியையும் ஒதுக்கவில்லை. ஆனால், விளம்பரம் மட்டும் திமுக செய்வதாக விமர்சித்தார்.

News February 9, 2026

கம்யூ., சித்தாந்தத்தில் இருந்து இந்தியா விடுபட வேண்டும்:

image

நக்சலைட்டுகள் தங்களது ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைந்தால் அரசிடம் இருந்து உதவிகள் கிடைக்கும் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார். கம்யூனிஸ்டுகள் எங்கெல்லாம் ஆட்சியில் இருந்தார்களோ, அங்கெல்லாம் அவர்களால் வளர்ச்சியை கொண்டுவர முடியவில்லை. கம்யூனிச சித்தாந்தம் அழிவைக் குறிக்கும் ஒரு சித்தாந்தமாகும். எனவே, அழிவுகரமான கம்யூனிச சித்தாந்தத்தில் இருந்து இந்தியா விடுபட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

News February 9, 2026

T20 போட்டிகளில் மோசமான சாதனை!

image

இலங்கை T20 அணியின் கேப்டன் தசுன் ஷனகா மிக மோசமான சாதனையை படைத்துள்ளார். T20 உலகக் கோப்பையில் அயர்லாந்துக்கு எதிராக இன்று டக் அவுட் ஆனார். இதன்மூலம், T20 போட்டிகளில் அதிகமுறை(16) டக் அவுட் ஆன வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக டக் அவுட் ஆனவர்கள் பட்டியலில், ருவாண்டாவின் ஜாப்பி(15) மற்றும் அயர்லாந்து கேப்டன் ஸ்டிர்லிங்(14) ஆகியோர் உள்ளனர்.

error: Content is protected !!