News December 22, 2025
BREAKING: கூட்டணிக்கு அழைப்பு விடுத்தார் இபிஎஸ்

திமுகவிற்கு எதிரான ஒருமித்த கருத்துடைய அனைத்து கட்சிகளும் அதிமுக கூட்டணிக்கு வரலாம் என்று EPS அழைப்பு விடுத்துள்ளார். தவெகவை கூட்டணிக்கு வர வேண்டும் என நயினார் அழைத்தது பாஜகவின் கருத்து என்ற அவர், திமுகவை வீழ்த்த நினைக்கும் கட்சிகள் எங்களுடன் வரலாம் எனக் கூறினார். NDA கூட்டணியில் மீண்டும் OPS-ஐ இணைப்பது குறித்து நாளை பியூஷ் கோயல் பேச வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், EPS இவ்வாறு கூறியுள்ளார்.
Similar News
News February 5, 2026
TN இடைக்கால பட்ஜெட்டில் என்னென்ன இடம்பெறும்?

தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று பகல் 12 மணிக்கு CM ஸ்டாலின் தலைமையில் கூடுகிறது. இதில் பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட இருக்கிறது. பிப்ரவரி 2 அல்லது 3-வது வாரத்தில் TN அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்குவதால் இதில் என்னென்ன அறிவிப்புகள் இடம்பெறும் என மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
News February 5, 2026
இன்று அறிமுகமாகும் ‘பாரத் டாக்ஸி’

2 மாத சோதனைக்கு பிறகு, இன்று ‘பாரத் டாக்ஸி’ திட்டத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்கிறார். முதற்கட்டமாக, டெல்லி & குஜராத்தில் தொடங்கப்படும் இச்சேவை, விரைவில் சென்னை, மும்பை, ஹைதராபாத் போன்ற நகரங்களிலும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. சேவை கட்டணமின்றி, பயண கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் இந்த டாக்ஸியில், பிற தனியார் டாக்ஸிக்களை விட கட்டணம் 20% – 30% வரை குறைவாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
News February 5, 2026
தங்கம், வெள்ளி விலை.. ஒரே நாளில் தலைகீழாக மாறியது

கடந்த வாரத்தில் 1 கிலோவுக்கு ₹1.45 லட்சம் வரை குறைந்து வெள்ளி விலை, பொதுமக்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால், கடந்த 2 நாள்களில் மட்டும் 1 கிலோவுக்கு ₹40,000 உயர்ந்து வெள்ளி விற்பனையாகிறது. தங்கமும் கடந்த சில நாள்களாக ₹22,000 வரை குறைந்தது. இந்நிலையில், தங்கம், வெள்ளி விலை ஒரே நாளில் தலைகீழாக மாறி, உயர்ந்தவாறே தொடர்வது பொதுமக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.


