News April 2, 2026
BREAKING: குவாரி முறைகேடு வழக்கில் பொன்முடி விடுதலை

செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் பொன்முடி, அவரது மகன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்து விழுப்புரம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக செம்மண்ணை வெட்டி எடுத்து, அரசுக்கு ₹28 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக அவர்கள் மீது 14 ஆண்டுகளுக்கு முன் வழக்குத் தொடரப்பட்டது. ஆனால், வழக்கில் போதிய சாட்சிகள் இல்லை எனக்கூறி அனைவரையும் கோர்ட் விடுவித்துள்ளது.
Similar News
News April 13, 2026
திருவள்ளூர் வருகிறார் மு.க.ஸ்டாலின்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகிற 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது 5ஆவது கட்ட தேர்தல் பிரசாரத்தை இன்று(ஏப்.13) திருவள்ளூரில் தொடங்குகிறார். இதன்படி, ஏப்.13ஆம் தேதி மாலை 5 மணிக்கு திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி சாலையில் பிரச்சாரத்தை நடத்துகிறார். இதில், திரளான கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
News April 13, 2026
சிறுநீரகத்தில் கற்கள்.. இதுதான் அறிகுறிகள்

சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும் பிரச்னையை கீழ்காணும் அறிகுறிகள் மூலம் நாம் அறிய முடியும். ➤இடுப்பின் பின் பகுதியில் வலி உருவாகும் ➤குமட்டல், வாந்தி ➤சிறுநீர் கழிக்கும்போது வலி ➤சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறுவது ➤காய்ச்சல் ➤சிறுநீரில் துர்நாற்றம். மேற்கண்ட அறிகுறிகள் இருப்பின், அது சிறுநீரக கற்கள் பிரச்னையாக இருக்கலாம். ஆதலால் டாக்டரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது. SHARE IT.
News April 13, 2026
தேமுதிகவுக்கு சக்திக்கு மீறி ஆசை: ராஜேந்திர பாலாஜி

தேமுதிகவுடன் கூட்டணி வேண்டாம் என்ற EPS முடிவில் நியாயம் உள்ளதாக ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். தேமுதிகவை கூட்டணியில் தக்கவைக்க EPS தவறிவிட்டார் என்ற கருத்துக்கு பதிலளித்த அவர், தேமுதிக சக்திக்கு மீறி தொகுதிகளை எதிர்பார்த்தது; அதை பூர்த்தி செய்ய அதிமுக தயாராக இல்லை என்றார். மேலும், திமுகவுடன் இணைந்திருக்கும் தேமுதிகவின் முடிவு அவர்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்தார்.


