News February 25, 2026
BREAKING: குமரி மக்களுக்கு முதல்வர் புதிய அறிவிப்பு

குமரியில் ரூ.1,785 கோடியில் நலத்திட்ட பணிகளை முதல்வர் தொடங்கி வைத்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
1. குமரி நகராட்சியின் குடிநீர் தேவையை பூர்த்திசெய்ய பழையாற்றில் இருந்து கூடுதல் நீர் வழங்க ரூ.28.20 கோடியில் புதிய திட்டம்.
2. முக்கடல் சங்கமிக்கும் குமரியில் ரூ.25 கோடி மதிப்பில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்.
3. குளச்சல், மண்டைக்காடு பகுதியில் AVM கால்வாய் ரூ.1.20 கோடியில் புனரமைப்பு.
Similar News
News February 25, 2026
குமரி: பசு மாடு வாங்க ரூ.1,20,000 வேண்டுமா?

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு விபரங்களுடன், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!
News February 25, 2026
குமரியில் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்

குமரியில் ரூ.1785 கோடியில் முதல்வர் முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
1. களியாக்காவிளை – குமரி சாலையில் ரூ.9 கோடியில் சாலைகள் அகலப்படுத்தப்படும்.
2. முளகுமூடு தூய மரியன்னை பசிலிக்கா தேவாலயம் ரூ.2 கோடியில் பழமை மாறாமல் புனரமைப்பு.
3. மீனவர் நலவாரியம் மூலம் மீனவர் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும்.
News February 25, 2026
குமரி: டிகிரி போதும்.. ரூ.38,500 சம்பளத்தில் வங்கி வேலை ரெடி

பெடரல் வங்கியில் காலியாக உள்ள Associate Officers (Sales) பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்த 21-32 வயதுடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.38,500 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கு<


