News January 12, 2026
BREAKING: குமரி எக்ஸ்பிரஸ் ரயிலுக்குள் இருந்த சடலம்

பெங்களூரில் இருந்து கன்னியாகுமரிக்கு எக்ஸ்பிரஸ் ரயில் இன்று மதியம் வந்தது. ரயிலில் இருந்து அனைவரும் இறங்கி சென்ற நிலையில் ரயில் பெட்டிகளை ரயில்வே போலீசார் சோதனை செய்த நிலையில் ரயில் பெட்டி ஒன்றில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில் இருக்கையின் அடியில் படுத்து கிடந்துள்ளார். ரயில்வே போலீசார் அவரது உடலை மீட்டு யார் எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரித்து வருகின்றனர்.
Similar News
News January 24, 2026
குமரி: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

இன்று (23.01.2026) கன்னியாகுமரி மாவட்ட இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, இரவு நேரங்களில் வெளியில் பயணிக்கும் நபர்கள் ஆபத்தான சூழலில் மேலே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. .
News January 23, 2026
குமரி: ரயில் நேரத்தில் மாற்றம்!

திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, கன்னியாகுமரியிலிருந்து மங்களூரு செல்லும் பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயிலின் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஜன. 26 அன்று அதிகாலை 3.45 மணிக்கு பதிலாக 4.45 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. *SHARE
News January 23, 2026
நாகர்கோவில்: 6ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை!

நாகர்கோவிலில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்கள் தங்கும் விடுதியில் சமையல் வேலை பார்த்து வந்த சிவா என்பவர் அந்த விடுதியில் 6ம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நேசமணி நகர் போலீசார் 2017ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த போக்சோ நீதிபதி நேற்று சிவாவுக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்


