News April 29, 2025
BREAKING: குடிநீர் தொட்டியில் மனித மலம்!

தி.மலை மாவட்டம் பாணம்பட்டு கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மலத்தை பூசிய நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று காலை தண்ணீர் பிடிக்க வந்த கிராம மக்கள் குடிநீர் தொட்டியில் மலம் பூசப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்த போலீசார் மலத்தை பூசியது யார் என தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மீண்டும் ஒரு வேங்கைவயல் சம்பவம் அரங்கேறியுள்ளது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News April 29, 2025
தி.மலை கோயிலில் திரைப்பட இயக்குனர் பாலா சாமி தரிசனம்

திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அண்ணாமலையார் அருளை பெறுகின்றனர். இத்தகைய பிரசித்து பெற்ற கோவிலில் திரை பிரபலங்களும் அரசியல் ஆளுமைகளும் சாமி தரிசனம் செய்ய வருவதுண்டு. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் (ஏப்.29) இன்று பிரபல திரைப்பட இயக்குனர் பாலா சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் சார்பில் வரவேற்பு வழங்கப்பட்டது. மேலும், ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
News April 29, 2025
தி.மலையில் அரசு வேலை; நாளை கடைசி நாள்

திருவண்ணாமலை அரசு பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 427 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளது. இப்பணிக்கு 18 வயது முதல் 40 வரை உள்ள பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி/தோல்வி அடைந்திருக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இந்த <
News April 29, 2025
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு, கட்டுரை போட்டி

செம்மொழி நாள் விழாவை முன்னிட்டு மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதற்கு வருகிற 7-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பஙளை திருவண்ணாமலை மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தின் tamilvalarchitvm@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க.