News September 26, 2025

BREAKING: கிருஷ்ணகிரியில் இரட்டைக்கொலை

image

கிருஷ்ணகிரி பாஞ்சாலியூர் அடுத்த யாசின் நகர் பகுதியில் இன்று (செ.26) தாய் மற்றும் அவரின் பெண் குழந்தை கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மர்ம நபரால் தாய் எல்லம்மாள் மற்றும் 13 வயது சிறுமி யாசிதா ஆகியோர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளனர். இரட்டை கொலை தொடர்பாக மாவட்ட எஸ்.பி தங்கதுரை நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News

News October 17, 2025

சிங்காரப்பேட்டையில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்!

image

நலன் காக்கும் ஸ்டாலின் முகாம் திட்டத்தின் கீழ் மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம் நாளை அக்-18ம் தேதி காலை 9 முதல் மாலை 5 மணி வரை, சிங்காரப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற உள்ளது. இதில் இலவசம் முழு உடல் பரிசோதனை & சிகிச்சைகள் நடைபெற உள்ளது. சிகிச்சைக்கு வரும் பயனாளிகள் அனைவரும் ஆதார் கார்டு கொண்டு வந்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் தெரிவித்துளார்.

News October 16, 2025

கிருஷ்ணகிரி: இரவில் வெளியே செல்வோர் கவனத்திற்கு

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. வேலை செல்லும் பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க

News October 16, 2025

கிருஷ்ணகிரி மக்களே நாளை மிஸ் பண்ணிடாதீங்க

image

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. அதன்படி வரும் அக்.17ஆம் தேதி காலை 10.00 மணி முதல் 1.30 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் 10th,12th, டிப்ளமோ, ஐடிஐ முடித்தோர், மற்றும் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு 04343-291983 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். *நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க*

error: Content is protected !!