News January 6, 2026

BREAKING: காஞ்சிபுரத்தில் மழை வெளுக்கும்!

image

தெற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்நிலையில் காஞ்சிபுர மாவட்ட பகுதிகளில் வரும் ஜன.10 அன்று கன மழைக்கான மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஜன-11 அன்றும் மழை இருக்குமென்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே ஜன.10க்கு மேல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரவலான மழையை எதிர்பார்க்கலாம். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

Similar News

News February 1, 2026

காஞ்சியில் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு நாளை (பிப். 1) அன்று வள்ளலார் நினைவு நாளை முன்னிட்டு விடுமுறை விடப்பட்டுள்ளது என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அனைத்து டாஸ்மாக் (FL1) மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், FL2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள், FL3 உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் மூடப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

News January 31, 2026

காஞ்சி: பெண்களுக்கு தள்ளுபடியுடன் ரூ.3 லட்சம் கடன்!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு கடன் வழங்கப்படும். இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <>கிளிக்<<>> செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். *தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க*

News January 31, 2026

காஞ்சி: தமிழ் தெரிந்தால் போதும்… வங்கியில் வேலை!

image

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) வட்டார அதிகாரி பதவிக்கு 2,050 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 165 காலியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு துறையில் டிகிரி இருந்தால் போதும். சம்பளமாக ரூ.48,480 – ரூ.85,920 வரை வழங்கப்படும். கடைசி நாள்: பிப்.18. <>இங்கு கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். கட்டாயம் தமிழ் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!