News January 6, 2026

BREAKING: கவர்னர் RN ரவியை சந்திக்கிறார் EPS

image

கவர்னர் RN ரவியை காலை 11 மணியளவில் EPS சந்திக்கவுள்ளார். அவரிடம் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு பிரச்னை உள்பட திமுக அரசுக்கு எதிரான பல்வேறு குற்றச்சாட்டுகள் அடங்கிய மனுவை EPS வழங்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. நேற்று தமிழகம் வந்த அமித்ஷாவை SP வேலுமணி சந்தித்து பேசிய நிலையில், இன்று கவர்னரை EPS சந்திக்கவுள்ளது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

Similar News

News February 3, 2026

BREAKING: தங்கம் விலை.. அதிர்ச்சி தகவல்

image

கடந்த 3 நாள்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ₹22,800 குறைந்து நகைப் பிரியர்களை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தியது. ஆனால், <<19039267>>இன்று 2 முறை விலை உயர்ந்ததால்<<>> பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், சர்வதேச சந்தையிலும் தங்கம் விலை $250.46 வரை (இந்திய மதிப்பில் ₹22,633) உயர்ந்துள்ளதால், வரும் நாள்களிலும் விலை உயரக்கூடும் என கூறப்படுகிறது.

News February 3, 2026

நான் பேசுவதை திட்டமிட்டு தடுக்கிறார்கள்: ராகுல் காந்தி

image

நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறையாக, மத்திய அரசு தூண்டுதலின் பேரில் எதிர்க்கட்சி தலைவரைத் தடுக்க சபாநாயகர் கட்டாயப்படுத்தப்பட்டதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். ஓம் பிர்லாவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தேசிய பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் தான் பேசுவதை தடுக்க ஒரு திட்டமிட்ட முயற்சி நடப்பதாகவும், அடிப்படை ஜனநாயக உரிமைகள் மறுப்பது ஒரு மோசமான சூழ்நிலைக்கு வழிவகுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

News February 3, 2026

நடிகை ராஜேஸ்வரி தற்கொலை.. சக நடிகர்கள் வேதனை

image

நடிகை ராஜேஸ்வரியின் தற்கொலை மீண்டும் சின்னத்திரை ரசிகர்களை வேதனைக்குள்ளாக்கி வருகிறது. அதற்கு காரணம், அவர் நடித்துவந்த சிறகடிக்க ஆசை சீரியலில் ராஜேஸ்வரி இறப்பது போன்ற காட்சி நேற்று ஒளிபரப்பானதுதான். இதுகுறித்து வேதனையுடன் சக நடிகர் <<19035018>>பழனியப்பன்<<>> வீடியோ வெளியிட்டிருந்தார். தொடர்ந்து, ராஜேஸ்வரியின் இழப்பை ஜீரணிக்க முடியவில்லை என அந்த சீரியலின் நடிகர்கள் பலரும் SM-ல் சோகத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.

error: Content is protected !!