News January 13, 2026

BREAKING: கரூர் வழக்கில் விஜய் கூறிய ரகசியம்

image

டெல்லியில் முகாமிட்டுள்ள விஜய், CBI அதிகாரிகளிடம் கூறிய பல்வேறு முக்கியமான தகவல்கள் கசிந்துள்ளன. 4 பேர் கொண்ட <<18839971>>CBI அதிகாரிகளிடம்<<>> 100-க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த விஜய், TN அரசுக்கு எதிராக பல்வேறு தகவல்களையும் கூறியதாக தெரிகிறது. குறிப்பாக, காவல்துறையின் அழுத்தத்தின் பேரிலேயே கரூரிலிருந்து தான் சென்னை கிளம்பியதாகவும், கூட்ட நெரிசலுக்கு அரசுதான் முழு காரணம் என அழுத்தமாக கூறியுள்ளாராம்.

Similar News

News January 26, 2026

வலுவாக இருக்கும் பொருளாதார வளர்ச்சி: முர்மு

image

குடியரசு தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி முர்மு ஆற்றிய உரையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக உள்ளதாகவும், இளைஞர்கள் முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார். நாட்டின் வளர்ச்சிக்கு பெண்கள் முக்கிய பங்காற்றி வருகின்றனர் என்றும், மகளிர் உலகக்கோப்பை, பார்வையற்றோர் மகளிர் உலகக்கோப்பையை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

News January 26, 2026

சூழ்ச்சியில் விசிகவினர் சிக்கக்கூடாது: ஆதவ் அர்ஜுனா

image

விசிகவில் இருபது பேர் மட்டும் இருப்பதாக இன்று ஆதவ் அர்ஜுனா பேசியது சர்ச்சையானது. இந்நிலையில், நான் பேசிய சில வார்த்தைகள் தவறாகப் புரிந்துக் கொள்ளப்பட்டதாக ஆதவ் விளக்கமளித்துள்ளார். திமுகவின் ஆட்களாகவே மாறிவிட்ட 20 பேர் விசிகவுக்குள் இருக்கிறார்கள் என்பதைதான் சுட்டிக்காட்டினேன். ஆனால், தனது பேச்சை தவறாக திரிக்கும் திமுகவினரின் சூழ்ச்சியில் விசிக தோழர்கள் சிக்கிக் கொள்ளக்கூடாது எனக் கூறினார்.

News January 26, 2026

விஜய், செங்கோட்டையனை அட்டாக் செய்த அதிமுக

image

அதிமுக ஆட்சியை ஊழல் ஆட்சி என்று குறைசொல்லிவிட்டு, அந்த ஆட்சியில் அமைச்சராக இருந்த செங்கோட்டையனை பக்கத்திலேயே உட்கார வைத்து கொள்வதுதான், நீங்கள் கூறும், தூயசக்திக்கான விளக்கவுரையா என விஜய்க்கு அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது. அரசியலில் நல்லவர்களாக இருக்கலாம் , வல்லவர்களாக இருக்கலாம். ஆனால் ஒன்றுமே தெரியாத-புரியாத, தனது Fan’s-ஐ கூட ஏமாற்றும் தவெக தலைவர் போல் இருக்கக்கூடாது எனவும் சாடியுள்ளது.

error: Content is protected !!