News August 26, 2025
BREAKING: கரூரில் முன்னாள் எம்.எல்.ஏ. மரணம்!

கரூர் மாவட்ட பகுதிகளை உள்ளடக்கிய அரவக்குறிச்சி தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. கலிலூர் ரஹ்மான் வயது முதிர்வால் காலமானார். அவருக்கு வயது 78. 2006-ம் ஆண்டு அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கரூர் பள்ளப்பட்டியில் பிறந்த இவர், தி.மு.க. சார்பில் போட்டியிட்டு, 45,000க்கும் கூடுதலான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். 2 முறை தேர்வு நிலை பேரூராட்சியின் தலைவராகவும் அவர் இருந்துள்ளார்.
Similar News
News August 26, 2025
கரூர்: ரூ.25,500 சம்பளத்தில் அரசு வேலை!

கரூர் மக்களே, வெளியுறவு துறையின் கீழ் புலனாய்வு பிரிவில் காலியாக உள்ள 394, ஜூனியர் புலனாய்வு அதிகாரி (Intelligence Officer Grade-II) பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாதம் ரூ.25,500 முதல் அதிகபடியாக ரூ.81,000 வரை சம்பளம் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் 14.09.2025 தேதிக்குள் <
News August 26, 2025
கரூர்: டிகிரி முடித்தால் ரயில்வே வேலை!

கரூர் மக்களே..,ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம்(RRB Station Controller பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு செப்.15ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. கணினி அடிப்படையான தேர்வு முறையில் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். <
News August 26, 2025
கரூர் விவசாயிகளுக்கு பிரதம மந்திரி காப்பீடு திட்டம்

கரூர் மாவட்டத்தில் தற்போது 2025 காரீப் பருவத்தில் சாகுபடி செய்யும் வாழை, மரவள்ளி, மஞ்சள், தக்காளி மற்றும் வெங்காயம் போன்ற பயிா்களுக்கு பயிர் காப்பீடு செய்ய அரசால் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. மேலும் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பயிர் காப்பீடு செய்வதன் மூலமாக காலநிலை மாற்றங்களால் ஏற்படும் இழப்புகளை தவிர்க்கலாம்.
மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தகவல். அளித்துள்ளார்