News September 27, 2025

BREAKING: கரூரில் சோகம்.. செந்தில் பாலாஜி பேட்டி!

image

கரூர்: தவெக தலைவர் விஜய் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 30க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த எம்எல்ஏ செந்தில்பாலாஜி, “மருத்துவமனையில் அனைத்து மருத்துவர்களும் பணியில் உள்ளனர். கூடுதலாக சேலம், நாமக்கல்லில் இருந்து மருத்துவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது”என்றார்.

Similar News

News February 1, 2026

அரவக்குறிச்சியில் தட்டி தூக்கிய விஜயபாஸ்கர்

image

அரவக்குறிச்சி மேற்கு ஒன்றிய திமுக தொண்டர் அணி துணை அமைப்பாளர் டி.சிவசாமி, அமமுக ஊராட்சி செயலாளர் பி.சரவணன் மற்றும் பலர் அக்கட்சிகளில் இருந்து விலகி முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இந்நிகழ்வின் போது கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

News February 1, 2026

கரூர்: ரயில்வேயில் 22,195 பேருக்கு வேலை! APPLY NOW

image

கரூர் மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 22,195 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 18 – 33 வயதுகுட்பட்ட 10-வது தேர்ச்சி பெற்றவர்கள் மார்ச் 3-ம் தேதிக்குள் <>இங்கு க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.18,000 வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். ( மத்திய அரசு வேலை தேடுவோருக்கு SHARE பண்ணுங்க)

News February 1, 2026

கிருஷ்ணராயபுரம் அருகே விபத்து

image

கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முருகானந்தம் என்பவர் பணிபுரிந்து வருகிறார். நேற்று இவர் சாலையில் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே வழியில் பிரித்திவிராஜ் என்பவர் ஓட்டி வந்த பைக் மோதியது. இதில் படுகாயம் அடைந்து, மேல் சிகிச்சைக்காக கரூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!