News April 4, 2025
BREAKING: கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகள் இயங்கும்

கடலூர் மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்த விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு நாளை (05.04.2025) சனிக்கிழமை கடலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வகை பள்ளிகளும் முழு வேலை நாளாக செயல்படும் என கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். (SHARE பண்ணுங்க)
Similar News
News April 5, 2025
சகல செளப்பாக்கியங்களை அருளும் தில்லை காளி

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள தில்லை காளி கோயில் 1000 ஆண்டுகள் பழமையானதாகும். பார்வதியின் மீது கோபமுற்ற சிவன் கோர முகம் கொண்ட காளியாக மாற சாபமிட்டார். பின்னர் இருவருக்கு நடந்த நடன போட்டியில் தோல்வியடந்த காளி இந்த தில்லை பகுதியை வந்தடைந்தார். முற்காலத்தில் போருக்கு செல்லும் வீரர்கள் காளியை வணங்கி விட்டு செல்வார்கள். தில்லை காளியை வணங்கினால் சகல செளபாக்கியமும் கிடைக்கும் எனக் கூறுகின்றனர்.
News April 5, 2025
கடலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் சார்பில், கடல் சார்ந்த பொருட்கள் மதிப்பு கூட்டுதல் பயிற்சி வகுப்புகள் வரும் 15, 16 மற்றும் 17 ஆகிய 3 நாட்கள் கடலூர் அடுத்த உச்சிமேடு சமுதாயக் கூடத்தில் நடைபெறவுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு www.editn.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாமென கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
News April 5, 2025
கடலூரில் பொறியியல் படித்தவர்களுக்கு வேலை

கடலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் உள்ள Customer Service Engineer பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் ரூ.15,000 வரை ஊதியம் வழங்கப்படுகிறது. இந்தப் பணியிடங்களுக்கு விருப்பம் உள்ளவர்கள் <