News September 2, 2025

BREAKING: ஓசூர் அருகே 2 தொழிலாளர்கள் பலி

image

ஓசூர் அருகே பெளகொண்டபள்ளியில் தனியார் நிறுவனத்தில் இன்று (செ.02) கிரேனில் இருந்து பிளேட் அறுந்து விழுந்து 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். சிவகங்கையைச் சேர்ந்த காளிமுத்து (37), பீகாரைச் சேர்ந்த பிரேமோத்குமார் (27) ஆகியோர் உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News September 2, 2025

கிருஷ்ணகிரி: பேருந்தில் Luggage-ஐ மறந்தால்; இதை செய்யுங்க

image

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். ஷேர் பண்ணுங்க.

News September 2, 2025

கிருஷ்ணகிரி: 10th பாஸ் போதும்.. காவல்துறையில் வேலை

image

கிருஷ்ணகிரி இளைஞர்களே காவல்துறையில் பணி செய்ய அருமையான வாய்ப்பு. தமிழக காவல்துறையில் ( Police Constables, Jail Warders & Firemen) காலியாக உள்ள 3,644 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18- 31 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<> இந்த லிங்கில்<<>> வரும் செ.21க்குள் விண்ணப்பிக்கலாம். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News September 2, 2025

கிருஷ்ணகிரியில் இனி அரசு ஆபீஸ் போக தேவையில்லை!

image

கிருஷ்ணகிரி மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். <>இங்கு கிளிக்<<>> செய்து உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்களை தெரிந்துகொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!