News September 9, 2025
BREAKING ஏரலில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில் தனியார் செங்கல் சூலை செயல்பட்டு வருகிறது. இங்கு லட்சுமண பெருமாள்(38) என்பவர் செங்கல் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்த பணியில் ஈடுபட்ட போது அவர் சிறிது நேரத்திற்கு முன்பு மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஏரல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News March 3, 2026
தூத்துக்குடி: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

தபால் அலுவலகத்தில் பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT
News March 3, 2026
தூத்துக்குடி: எய்ம்ஸ் நிறுவனத்தில் வேலை அறிவிப்பு

மதுரை, புதுச்சேரி ,காரைக்கால் உள்ளிட்ட அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில்(எய்ம்ஸ்) நிரப்பப்பட உள்ள 2,551 செவிலியர் அலுவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் பி.எஸ்சி நர்சிங், டிப்ளமோ நர்சிங் முடித்த 18 முதல் 30 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக ரூ.9,300 – 34,800 வழங்கப்படும் நிலையில் இது குறித்த முழு விவரங்களை<
News March 3, 2026
மது அருந்த பணம் தராததால் தாயை கொலை செய்த மகன்

கயத்தாறு அருகே உள்ள தெற்கு சுப்பிரமணியத்தை சேர்ந்தவர் வேல்சாமி இளநீர் வியாபாரி. இவர் தனது தாயாரிடம் மது அருந்த பணம் கேட்டுள்ளார் அவர் தர மறுக்கவே அவரை அறிவால் மற்றும் செங்கலால் தாக்கி கொலை செய்துள்ளார். இது சம்பந்தமாக கயத்தாறு போலீசார் வேல்சாமியை கைது செய்தனர். வேல்சாமி ஏற்கனவே 2003ஆம் ஆண்டு ஒருவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


