News March 30, 2025

BREAKING: ஈரோட்டில் வாயு தாக்கி இருவர் உயிரிழப்பு

image

ஈரோடு, பவானியில் ஆசிட் ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரியை சுத்தம் செய்யும் போது மயங்கி விழுந்த யுவனேந்தல், சந்திவேல் ஆகியோர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்களுடன் செல்லப்பன் என்பவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் பவானி அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News

News January 22, 2026

ஈரோடு: 8th போதும் அரசு டிரைவர் வேலை! APPLY NOW

image

ஈரோடு மக்களே, தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும். ரூ.15,700 முதல் ரூ.62,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு<> க்ளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 04.02.2026 ஆகும். இதை வேலை தேடுவோருக்கு ஷேர் பண்ணுங்க!

News January 22, 2026

​ஈரோடு அருகே 1 வயது குழந்தை பலி

image

​ஈரோடு சோளங்காபாளையத்தில், வடமாநில தம்பதி மனோஜ்குமார் பாய், லீசா. இவர்களது ஒன்றரை வயது பெண் குழந்தை லவ்லி, வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தது. தாய் தூங்கிக்கொண்டிருந்த நேரத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. வீட்டு உரிமையாளர் சத்தம் போடவே, அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 22, 2026

ஈரோடு: வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

ஈரோடு மாவட்டத்தில் ஜனவரி 2026-ஆம் மாதத்திற்கான வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக இரண்டாம் தள கூட்ட அரங்கில் 23.01.2026 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளது. இதில், விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று தங்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகளை மனுவாக அளித்து தீர்வு பெறலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!